கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா தொடர்பில் யாழில் முன்னாயத்தக் கூட்டம் (Photos)
வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா தொடர்பில் ஆராயும் முன்னாயத்தக் கூட்டம் யாழில் இடம்பெற்றுள்ளது.
குறித்த கூட்டமானது இன்றைய தினம் யாழ். மாவட்ட செயலகத்தில், அரசாங்க அதிபர் சிவஞானசுந்தரன் தலைமையில் நடத்தப்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடலில் திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள், உத்தேச செலவீனங்கள், பக்தர்களை அனுமதிக்கக்கூடிய எண்ணிக்கை என்பன ஆராயப்பட்டுள்ளன.
எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
இந்த நிலையில் இம்முறை கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவத்தினை 8000 பேருடன் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் இந்தியத் தூதரக அதிகாரிகள், கடற்படையினர், இராணுவத்தினர், பொலிஸார் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும், கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா எதிர்வரும் மார்ச் மாதம் 3, 4ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இந்தியாவுக்கு எதிராக புலம்பெயர் டாக்சி ஓட்டுநரின் மகன்: அவுஸ்திரேலிய அணியில் இந்திய வம்சாவளி பவுலர் News Lankasri
தீவு நாடொன்றை மொத்தமாக தாக்கவிருக்கும் புயல்: ஹொட்டல் ஒன்றில் சிக்கிய 200 பிரித்தானியர்கள் News Lankasri