வடக்கு, கிழக்கிற்கு இடைக்கால நிர்வாக அதிகாரங்களை கொடுக்க அரசாங்கம் தயாரா...! பகிரங்க கேள்வி - செய்திப் பார்வை
யுத்தத்தால் அழிந்துபோன வடக்கு, கிழக்கில் இடைக்கால நிர்வாகத்திற்கான அதிகாரங்களை கொடுத்து பிராந்திய ஒற்றுமையை ஏற்படுத்த அரசாங்கம் தயாராக உள்ளதா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தமிழ் மக்களை அழிப்பதற்காக சர்வதேசத்திடம் பெற்ற ஆயுதங்கள் மற்றும் கடன்களே இலங்கையை நிம்மதியற்ற நாடாக மாற்றியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், நாட்டை மீட்க புலம்பெயர் தமிழர்கள் தயார். ஆனால் இதற்கு சிங்கள அரசியல்வாதிகள் தயாரா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இச்செய்தி உள்ளிட்ட கொழும்பு தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களில் நேற்றைய தினம் இடம்பிடித்த முக்கிய செய்திகளின் தொகுப்பை இந்த பதிவில் காணலாம்,
3 முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி: மே மாதத்தில் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த ராசிகளுக்கு தான்! Manithan