தொலைபேசி வழியாக உத்தரவாதம் வழங்கிய சிறீதரன்! சுமந்திரன் விடயத்தில் எதுவும் நடக்கலாம்
நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியுற்ற சுமந்திரன் தேசியப் பட்டியல் மூலம் உள்நுழையப் போவதில்லை என அறிவிறுத்தியிருந்தாலும் குறித்த விடயத்தில் எதுவும் நடக்கலாம் என தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் அன்பின் செல்வேஸ் தெரிவித்துள்ளார்.
சுமந்திரன் தேசியப் பட்டியல் மூலம் உள்நுழையப் போவதில்லை என வெளிப்படையாக கூறியிருந்தாலும் அவர் அதற்கு மறைமுகமாக முயற்சிக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, தமிழரசுக் கட்சியின் வழக்கு தொடர்பாக விரைவில் தீர்வு காணப்படும் என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள சிறீதரன் தொலைபேசி வழியாக அன்பின் செல்வேஸிடம் உத்தரவாதம் வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக விரைவாக தீர்மானங்களை மேற்கொள்வதே தமிழ் மக்களுக்கும் தமிழரசு கட்சிக்கும் நல்லது என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றாவது அதிகூடிய ஆசனங்களை பெற்றுள்ள தமிழரசுக் கட்சி தமிழ் மக்களின் பிரதிநிதியாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதன்மூலம், உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடம் மீண்டும் ஒரு முறை தமிழரசுக் கட்சி தன்னை நிரூபித்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவை தொடர்பாக விரிவாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam
