இரத்தினபுரியில் இருந்து முதல் தடவையாக மக்களின் நேரடி தெரிவாக நாடாளுமன்றம் செல்லும் தமிழர்

Parliament of Sri Lanka Ratnapura Sri Lanka Parliament Election 2024 Sri Lanka General Election 2024
By Sivaa Mayuri Nov 16, 2024 11:29 PM GMT
Sivaa Mayuri

Sivaa Mayuri

in அரசியல்
Report
Courtesy: Sivaa Mayuri

இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து தமிழர் ஒருவர் வரலாற்றில் முதல் முறையாக மக்களால் நேரடியாக நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

முன்னணி கல்லூரி ஒன்றின் ஆசிரியரான சுந்தரலிங்கம் பிரதீப், 2024 நவம்பர் 14ஆம் திகதி நடைபெற்ற இலங்கையின் பொதுத்தேர்தலில், தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்டு இரண்டாவது விருப்பு உறுப்பினராக 112,711 வாக்குகளை பெற்று நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளார்.

இதன்படி, அவர் மக்களின் நேரடி தமிழர் தெரிவாக நாடாளுமன்றத்துக்கு செல்கிறார்.

தமிழரசு கட்சியின் தேசிய பட்டியல் ஆசனம் தொடர்பில் சிறீதரன் வெளியிட்ட தகவல்

தமிழரசு கட்சியின் தேசிய பட்டியல் ஆசனம் தொடர்பில் சிறீதரன் வெளியிட்ட தகவல்

சமூகப் பணி

1982 ஏப்ரல் 13ஆம் நாள் இரத்தினபுரி மாவட்டம் காவத்தை நகருக்கு அருகில் உள்ள ஓபாத பெருந்தோட்டத்தில், சுந்தரலிங்கம் சரஸ்வதி தம்பதிகளின் மூன்றாவது பிள்ளையாக பிறந்த பிரதீப், வறுமையான குடும்ப பின்னணியை கொண்டிருந்தாலும், சிறுவயதிலிருந்தே தந்தையின் வழியில் சமூகப் பணிகளில் ஈடுபடத் தொடங்கினார்.

இரத்தினபுரியில் இருந்து முதல் தடவையாக மக்களின் நேரடி தெரிவாக நாடாளுமன்றம் செல்லும் தமிழர் | First Time Elected Tamil In Ratnapura

நாடாளுமன்ற உறுப்பினர் பிரதீப், தமது ஆரம்ப கல்வியை ஓபாத இலக்கம் 01 தமிழ் வித்தியாலயத்திலும், உயர்தர கல்வியை ஸ்ரீ கிருணா மகா வித்தியாலயத்திலும் கற்றார். 2003 ஆம் ஆண்டு இலங்கையின் தேசிய பொலிஸ் சேவையில் இணைந்து கொண்ட அவர்,அட்டாளைச் சேனை அக்கரைப்பற்று போன்ற பிரதேசங்களில் 2007 ஆம் ஆண்டு வரை கடமையாற்றினார்.

பொலிஸ் சேவை அவரது அரசியல் பயணத்திற்கும் சமூக சேவைக்கும் இடையூறாக அமைந்ததால் அதிலிருந்து விலகி 2007 ஆம் ஆண்டு ,இலங்கை ஆசிரியர் சேவையில் தன்னை இணைத்துக் கொண்டார்.

பின்னர் தொழிற்சங்க பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட அவர்,2008 ஆம் ஆண்டு இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தேசிய மாநாட்டின் சங்கத்தின் உப தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்துமா தமிழரசின் தேசிய பட்டியல்! முன்வைக்கப்பட்ட கோரிக்கை

மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்துமா தமிழரசின் தேசிய பட்டியல்! முன்வைக்கப்பட்ட கோரிக்கை

அரசியல்

தொழிற்சங்க பணியிலும் அரசியல் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு 2016 ஆம் ஆண்டு கல்வி கூட்டுறவு சங்க தேர்தலில் வெற்றி பெற்று பிரதி தலைவராக பொறுப்பேற்றார்.மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்குமான சேவை ஆரம்பத்தில் மலையக மாணவர்களினதும் ஆசிரியர்களினதும் உரிமைக்காக குரல் கொடுத்த அவர், பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் தனது தொழிற்சங்க பணிகளை விரிவுபடுத்திக் கொண்டார்.

இரத்தினபுரியில் இருந்து முதல் தடவையாக மக்களின் நேரடி தெரிவாக நாடாளுமன்றம் செல்லும் தமிழர் | First Time Elected Tamil In Ratnapura

தற்போது அவர், மக்கள் விடுதலை முன்னனியின் முக்கிய உறுப்பினராகவும்,தேசிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட நிறைவேற்று குழு உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறார்.

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் பிரதீப்பின் தந்தையான சுந்தரலிங்கம், தனது 18-வது வயதில் இருந்தே இடதுசாரி மார்க்சிய சிந்தனையின் பால் ஈர்க்கப்பட்டு அரசியலில் தன்னை இணைத்துக் கொண்டார்.

1969 மற்றும் 1970 களில் பல இடதுசாரி தொழிற்சங்க போராட்டங்களில் பங்கேற்றார். 1970 க்கு பிறகு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் இரத்தினபுரி மாவட்டத்தின் முக்கிய தலைவர்களுள் ஒருவராக திகழ்ந்தார்.

மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்துமா தமிழரசின் தேசிய பட்டியல்! முன்வைக்கப்பட்ட கோரிக்கை

மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்துமா தமிழரசின் தேசிய பட்டியல்! முன்வைக்கப்பட்ட கோரிக்கை

கட்சிப் பணி

1973 தொடக்கம் 1974 காலப்பகுதியில் நாட்டில் ஏற்பட்ட உணவு பஞ்சத்தின் விளைவாக ஆயிரக்கணக்கான மலையகத் தொழிலாளர்கள் பட்டினியால் உயிரிழந்தனர்.

இரத்தினபுரியில் இருந்து முதல் தடவையாக மக்களின் நேரடி தெரிவாக நாடாளுமன்றம் செல்லும் தமிழர் | First Time Elected Tamil In Ratnapura

இந்நிலையில் “குறுகிய இனவாதத்தை தோற்கடிப்போம்” என்ற தொனிப்பொருளுடன் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரான தோழர் ரோஹன விஜயவீரவின் கட்சியில் தன்னை அவர் இணைத்துக் கொண்டார்.

1982 ஆம்ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட ஜேவிபியின் ஸ்தாபகர் ரோஹன விஜயவீரவை ஆதரித்து அவர் வெற்றிக்காக கடுமையாக உழைத்தார்.

1989 இல் அசாதாரண அரசியல் சூழ்நிலை காரணமாக தனது குடும்பத்தை பிரிந்து இந்தியாவில் அடைக்கலம் பெற்றார். அங்கு பல சவால்களுக்கு முகம் கொடுத்த அவர் 1994இல் மீண்டும் நாடு திரும்பி தனது கட்சிப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.   

சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப் பணிகள் ஆரம்பம்

சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப் பணிகள் ஆரம்பம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGallery
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கிளிநொச்சி

13 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, Mississauga, Canada

09 Dec, 2022
மரண அறிவித்தல்

காரைநகர், உருத்திரபுரம், திருநகர்

16 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

29 Nov, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கரணவாய், Ajax, Canada

15 Nov, 2024
மரண அறிவித்தல்

Gurunagar, ஆனைக்கோட்டை, Nienburg, Germany

15 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, புங்குடுதீவு 7ம் வட்டாரம், Pickering, Canada

17 Nov, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, வட்டக்கச்சி இராமநாதபுரம், கனடா, Canada, ஜேர்மனி, Germany, உக்குளாங்குளம்

17 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், யாழ்ப்பாணம், கொழும்பு

16 Nov, 2023
மரண அறிவித்தல்

மல்லாகம், சண்டிலிப்பாய்

13 Nov, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 Nov, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

16 Nov, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நவாலி வடக்கு, Jaffna, வெள்ளவத்தை

17 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Nov, 2017
மரண அறிவித்தல்

நெல்லியடி, யாழ்ப்பாணம், Paris, France

08 Nov, 2024
மரண அறிவித்தல்

நல்லூர், Duisburg, Germany

13 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, வெள்ளவத்தை

15 Nov, 2019
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம்

12 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம், சுதுமலை, கொழும்பு, West Drayton, United Kingdom

09 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Chelles, France

12 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sargans, Switzerland

14 Nov, 2024
மரண அறிவித்தல்

சுன்னாகம், Neuilly-sur-Marne, France

12 Nov, 2024
மரண அறிவித்தல்

கண்டி, திருநெல்வேலி, Neuilly-sur-Marne, France

13 Nov, 2024
மரண அறிவித்தல்

மீசாலை மேற்கு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Nottingham, United Kingdom, Liverpool, United Kingdom

09 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சூரியகட்டைக்காடு, நானாட்டான்

17 Oct, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
மரண அறிவித்தல்

நல்லூர், திருநெல்வேலி, London, United Kingdom

13 Nov, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US