பெரும்பான்மை கட்சிகளை கடுமையாக விமர்சித்த சிறீதரன்
பெரும்பான்மைக் கட்சிகள் தமிழர்களுக்காக எதுவும் செய்ய தயார் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
மன்னார் அடம்பனில் நேற்று(02.05.2025) நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“தமிழர்களாக நாங்கள் வாழ வேண்டும் என்றால் தமிழர்கள் தம்மை தேசிய இனமாக அடையாளப்படுத்தப்பட்ட வேண்டும் என்றால் நாங்கள் இந்த மண்ணின் மைந்தர்களாக வாழ வேண்டும் என்றால் எம் மீதான அடக்குமுறைகள் நிறுத்தப்பட வேண்டும்.
போர்க் குற்றங்கள்
தமிழர்கள் போர்க் குற்றங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் உணவு அனுப்பாமல் கொல்லப்பட்டுள்ளார்கள்.
நான்கு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் இருந்த போது 70 ஆயிரம் பேருக்கு தான் உணவு அனுப்பப்பட்டது.
இதனை உலக நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால், எந்த அரசியல் கட்சிகளும் அதற்கான நீதியை வழங்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 4 நாட்கள் முன்

சீக்கிரமே திருமணம் செய்ய ஆசைப்படும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
