முப்படைகளில் இருந்து தப்பியோடிய இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது
முப்படைகளில் இருந்து தப்பியோடிய அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் உள்ளிட்ட 2325 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
கடந்த பெப்ரவரி 22ம் திகதி தொடக்கம் மே மாதம் 01ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், இராணுவத்தைச் சேர்ந்த 2017 பேரும், கடற்படையின் 145 பேரும், விமானப்படையினர் 163 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டநடவடிக்கை
இவர்களை அந்தந்த படைப்பிரிவின் விசேட விசாரணைக்குழுவினர் கைது செய்துள்ளனர்.

இதற்கு மேலதிகமாக முப்படைகளில் இருந்து தப்பியோடிய 282 சிப்பாய்களை பொலிஸாரும் கைது செய்துள்ளனர்.
இவர்களுக்கு எதிரான சட்டநடவடிக்கைகளின் பின்னர் அவர்களை சட்டரீதியாக படைப்பிரிவுகளில் இருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நடிகை குஷ்புவா இது.. 20 வயதில் அடையாளம் தெரியாத அளவுக்கு எப்படி இருந்திருக்கிறார் பாருங்க! Cineulagam
கடந்த வாரம் டாப் இடத்தில் வந்த அய்யனார் துணை இந்த வார நிலைமை... டாப் சீரியல்களின் டிஆர்பி விவரம் Cineulagam
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri