இலங்கை மக்கள் எதிர்பார்த்து நிற்கும் அனோஜனின் விடுதலை.. தமிரசுக் கட்சி முன்வைத்துள்ள கோரிக்கை

Saudi Arabia Gnanamuththu Srineshan
By Rusath Sep 20, 2026 04:34 AM GMT
Report

அனோஜனின் விடுதலை அல்லது அவர்கள் தண்டனை குறைப்பு தொடர்பில் இஸ்லாமியமாக சகோதரர்கள், அரசியல்வாதிகள் இந்த விடயத்தை சாதகமான முறையில் பரிசோதனை செய்து அவருடைய விடுதலைக்கு அவருடைய தண்டனை குறைப்புக்கான வழிவகைகளை செய்ய வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறீநேசன் தெரிவித்துள்ளார்.

இன்று (19.09.2026) மட்டக்களப்பு செட்டிபாளையத்திலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், "இலங்கையிலிருந்து சவூதி அரேபியாவில் தொழில் நிமித்தமாக சென்று பணியாற்றிய அம்பாறை மாவட்டம் நற்பட்டிமுளை கிராமத்தைச் சேர்ந்த சிவராஜா அனோஜனது நிலைமை தொடர்பாக அண்மையில் வேதனையான தண்டனை தொடர்பான விடயம் பரவலாகியுள்ளது.

முன்வைக்கப்படும் கோரிக்கை.. 

இந்த விடயத்தில் இலங்கை அரசு தனது முழுமையான கவனத்தை செலுத்த வேண்டும் என்பது எனது வேண்டுகோளாகும்.

இலங்கை மக்கள் எதிர்பார்த்து நிற்கும் அனோஜனின் விடுதலை.. தமிரசுக் கட்சி முன்வைத்துள்ள கோரிக்கை | Srineshan Mp Anojan Sivarasa Death Sentence Saudi

அனோஜனின் பெற்றோர் ஜனாதிபதியை நேரில் சந்தித்து உரையாடுவதற்கும், தனது மகனுக்கு நேர்ந்துள்ள விடயத்தில் இருந்து தண்டனையை குறைப்பதற்கு அல்லது விடுவிப்பதற்கு உரிய இராஜதந்திர நடவடிக்கையை மனிதாபிமான அடிப்படையில் செய்யுமாறு கோரி இந்த ஏற்கனவே ஜனாதிபதிக்கு நாம் 8 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கையெப்பமிட்டு எங்களது வேண்டுகோளை விடுத்து இருக்கின்றோம். அதற்குரிய பதில் இன்னும் எமக்கு கிடைக்கவில்லை.

இருந்தபோதிலும் அனோஜனின் தண்டனை தொடர்பில் வெளிய விவகார அமைச்சு மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுவிடத்திலும் இந்த விடயம் தொடர்பில் நாங்கள் தெரிவித்து இருக்கின்றோம்.

இலங்கை மக்கள் எதிர்பார்த்து நிற்கும் அனோஜனின் விடுதலை.. தமிரசுக் கட்சி முன்வைத்துள்ள கோரிக்கை | Srineshan Mp Anojan Sivarasa Death Sentence Saudi

அவர்களும் இந்த விடயத்தில் தீவிரமான நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக அவர்கள் கூறியிருக்கின்றார்கள் அதனை விரைவாக எடுக்க வேண்டும் என நாம் கேட்கின்றோம்" என குறிப்பிட்டுள்ளார். 

அதேநேரம், சவூதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் சிவராசா அனோஜன் விவகாரம் குறித்து, வெளிவிவகார அமைச்சு உடனடியாக உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்த வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

அனோஜனின் விடுதலைக்காகத் தமிழ்பேசும் மக்களின் அரசியல் பேரவை சார்பில் சவூதி அரேபிய தூதரக உயர்மட்ட அதிகாரிகளைச் சந்திப்பதற்கு நேரம் கோரவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலதிக தகவல் - ராகேஷ் 

வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்! மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்! மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

திருடப்பட்ட மாடுகளை ஏற்றிச் சென்ற சொகுசு கார் கைப்பற்றல்

திருடப்பட்ட மாடுகளை ஏற்றிச் சென்ற சொகுசு கார் கைப்பற்றல்

10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US