புலம்பெயர்ந்தோரிடம் சிறிநேசன் விடுத்துள்ள கோரிக்கை
விமர்சனங்களோடு மாத்திரம் நின்று விடாமல் எமது பிரதேசங்களில் அபிவிருத்தி குன்றி காணப்படுகின்ற இடங்களில் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான பங்களிப்புகளை செய்ய புலம்பெயர் மக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் அமைந்துள் அவரது இல்லத்தில்; நேற்று (07.05.2025) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்கள் செறிந்து வாழ்கின்ற
மேலும் தெரிவிக்கையில், மட்டக்களப்பில் காணப்படுகின்ற 12 உள்ளூராட்சி சபைகளில் 9 உள்ளூராட்சி சபைகள் தமிழ் மக்கள் செறிந்து வாழ்கின்ற பிரதேசங்களாக காணப்படுகின்றன.
மூன்று உள்ளுராட்சி சபைகள் சகோதர முஸ்லிம் மக்கள் வாழ்கின்ற உள்ளுர் ஆட்சி சபைகளாக காணப்படுகின்றன.
தமிழ் மக்கள் செறிந்து வாழ்கின்ற உள்ளுராட்சி சபைகளில் தேர்தல் முடிவுகளின் பிரகாரம் தமிழரசு கட்சி ஆட்சி அமைக்கக்கூடிய நிலைமை காணப்படுகிறது.
சர்ச்சைக்குரிய இந்த பிரதிநதித்ததுவ முறையின் கீழ் வட்டார முறை தேர்வு விகிதாசார தேர்வு, அத்தோடு தொங்கு நிலையான நிலைமையும் சில இடங்களில் காணப்படுகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திசைகாட்டி சின்னம் ஒரு ஆசனத்தையும் எமது கட்சி மூன்று ஆசனங்களையும் பெற்றிருந்தது.
ஆனாலும் தேசிய மக்கள் சக்தி நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் பெரும் வாரியான ஆசனங்களை அவர்கள் பெற்றிருக்கவில்லை. பட்டியலுக்கு ஊடாகவும், சில வட்டாரங்களுக்கூடாகவும் மாத்திரம் ஒரு சில ஆசனங்கள் அவர்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.
விமர்சனங்களோடு மாத்திரம் நின்று விடாமல்
எமது கட்சியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனேகமாக வெற்றி பெற்றிருக்கின்றார். ஆனாலும் ஒரு சில இடத்தில் தோல்வி அடைந்திருக்கின்றார்கள். அதனை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
அரசியலில் அக்கறையினமாக காணப்படுகின்ற சிலர் ஒரு சில வட்டாரங்களில் தேசிய மக்கள் சக்தியை வெற்றி கொள்ள செய்திருக்கின்றார்கள். இது ஆளுங்கட்சியில் இருக்கின்றவர்களுக்கு இவ்வாறான ஒரு சில வட்டாரங்கள் சாதகமாக அமைந்திருக்கின்றன.
விமர்சனங்களோடு மாத்திரம் நின்று விடாமல் எமது பிரதேசங்களில் அபிவிருத்தி குன்றி காணப்படுகின்ற இடங்களில் கல்விசார் அபிவிருத்திகள், பௌதிகவளம் சார்ந்த செயற்பாடுகள் போன்றவற்றை முன்னெடுக்கப்படும் இடத்தில் பங்களிப்புகளை சரியானவர்களிடம் கொடுக்கின்ற போது அவர்கள் வீண்விரயம் இல்லாமல் அபிவிருத்தியை அந்தந்த பிரதேசங்களில் செய்ய முடியும் என்பதை நான் இச்சந்தர்ப்பத்தில் புலம்பெயர் மக்களிடம் கூறிக் கொள்கின்றேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

அட்டகாசமான வசூல் வேட்டையில் சசிகுமாரின் Tourist Family பாக்ஸ் ஆபிஸ்... 7 நாளில் எவ்வளவு வசூல்? Cineulagam
