சிறிமாவோவின் ஆட்சி இருந்திருந்தால் நாடு முன்னேறியிருக்கும்: பழனி திகாம்பரம்
முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க ஆட்சியில் நீடித்திருந்தால் நாடு முன்னேறியிருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் (Palani Digambaran) தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு ஒன்றில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சிறிமா ஆட்சிக் காலத்தில் மக்கள் வரிசையில் நின்றதாகவும் மக்கள் இன்னும் கொஞ்ச காலம் பொறுமை காத்திருந்தால் நாடு இன்று அபிவிருத்தி அடைந்திருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் அரசியல்வாதிகள் அதிகாரப் பேராசை கொண்டவர்களாக இருக்கின்றார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
ஆட்சியில் நீடிப்பது குறித்த கரிசனை
முன்னாள் ஜனாதிபதிகள் மஹிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க போன்றவர்கள் ஆட்சியில் எவ்வாறு தொடர்ந்தும் நீடிக்க முடியும் என்பதில் கூடுதல் கரிசனை காட்டி வந்ததாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவையோ இந்தியாவையோ நாம் திட்டுவதில் அர்த்தமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிங்கப்பூரில் பிரதமர் நாட்டைக் கட்டியெழுப்பியதன் பின்னர் இளையவர்களிடம் நாட்டை ஒப்படைத்தார் என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் இலங்கையில் அதிகாரப் பேராசை கொண்ட தலைவர்கள் நாட்டை முன்னேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |