ரி20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் பங்கேற்கும் இரண்டு இலங்கையர்கள்
அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் ரி20 உலகக் கிண்ண போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் இரண்டு இலங்கையர்கள் பங்கேற்க உள்ளனர்.
ரி20 உலகக் கிண்ணப் போட்டியின் அரையிறுதிப் போட்டியிலிருந்து இலங்கை அணி வெளியேற்றப்பட்டாலும், இறுதிப் போட்டியில் இலங்கையர்கள் இருவர் பங்கேற்க உள்ளனர். இதற்கமைய ஒருவர் நடுவராகவும் மற்றொருவர் போட்டி மத்தியஸ்தராகவும் பங்குபற்ற உள்ளனர்.
உலக கிண்ணப் போட்டியில் இரு இலங்கையர்கள்

பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடாத்தும் இறுதிப் போட்டியில், நடுவராக குமார் தர்மசேன கடயைமாற்ற உள்ளார்.
இதேவேளை, இந்த போட்டி மத்தியஸ்தராக முன்னாள் நட்சத்திர வீரர் ரஞ்சன் மடுகல்ல கடமையாற்ற உள்ளார்.
உலகின் சிரேஸ்ட போட்டி நடுவர்களில் ஒருவரான ரஞ்சன் மடுகல்ல இதுவரையில் தலா நான்கு உலகக் கிண்ண சர்வதேச ஒருநாள் போட்டிகளின் இறுதிப்போட்டிகளிலும், ரி20 உலகக் கிண்ண போட்டித் தொடர்களின் இறுதிப் போட்டிகளிலும் போட்டி மத்தியஸ்தராக கடமையாற்றியுள்ளார்.
குமார் தர்மசேன இதுவரையில் மூன்று ஒருநாள் உலகக் கிண்ண இறுதிப் போட்டிகளிலும், இரண்டு ரி20 உலகக் கிண்ண இறுதிப் போட்டிகளிலும் நடுவராக கடமையாற்றியுள்ளார்.
இம்முறை நடைபெற்ற உலகக் கிண்ண ரி20 போட்டியில் இலங்கை அணி சுப்பர் 12 சுற்றுடன் வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 21 மணி நேரம் முன்

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam
