யாழில் அரசின் புதிய வரிக்கொள்கை தொடர்பில் நிகழ்ச்சித்திட்டம் (Photos)
யாழில் அரசின் புதிய வரிக்கொள்கை மற்றும் சர்வதேச நாணய நிதிய நிகழ்ச்சித் திட்டத்தை அறிமுகப்படுத்துவது மற்றும் அரச வருமானம் மற்றும் பொருளாதார ஈட்டல் முன்னேற்ற உறுதிப்பாடு தொடர்பான நிகழ்ச்சித்திட்டம் இடம்பெற்றது.
நிகழ்ச்சித்திட்டம் இன்றையதினம் (25.07.2023) யாழ்ப்பாணம் சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் புதிய வரிக்கொள்கையின் அவசியம் தொடர்பில் துறைசார் அதிகாரிகளால் விளக்கமளிக்கப்பட்டது.
புதிய வரிக்கொள்கை
மேலும், இது தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சமரசிங்க சூம் தொழில் நுட்பத்தினூடாக வருகை தந்து தமது கருத்துக்களை முன்வைத்து விளக்கமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மத்திய வங்கியின் உதவிப்பணிப்பாளர் பரணவிதான, வடக்கின் ஆளுநர் திருமதி சார்ளஸ், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தர் சிறி சற்குணராஜா, யாழ் மாவட்ட அரச அதிபர் அம்பலவாணர் சிவபாலந்தரம் பிரதேச செயலாளர்கள், உள்ளிட்ட யாழ் மாவட்டத்தின் உயரதிகாரிகள் பிராந்திய ஊடகவியலாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
