போர்க்குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும் : டேவிட் லாம்மி
இலங்கையின் போர்க்குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு, அனுப்ப வேண்டும் என்று ஐக்கிய இராச்சியத்தின் நிழல் வெளிவிவகார செயலாளர் டேவிட் லாம்மி வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் பரிந்துரைகளுக்கு அமைய பிரித்தானிய அரசாங்கம் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 14 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த கோரிக்கையை அவர் விடுத்துள்ளார்.
தமிழர்களுடன் தோளோடு தோள் நிற்குமாறும் பிரித்தானிய அரசாங்கத்தை தாம் கேட்டுக்கொள்வதாக அவர் கோரியுள்ளார்.

முள்ளிவாய்க்கால் குற்றத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்திற்கான தேடுதல் முன்னோக்கி கொண்டு வரப்பட வேண்டும்.
இதன்மூலமே ஐக்கிய ராச்சியம், உலகெங்கிலும் உள்ள சமூகங்களுடன் இணைந்து, தமிழ் சமூகத்துக்கு அமைதி மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையைக் கட்டியெழுப்ப உதவ முடியும் என்றும் டேவிட் லாம்மி சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
இறுகும் ஈரான் போர்... மத்திய கிழக்கில் Doomsday அணுசக்தி விமானங்களை களமிறக்கிய ட்ரம்ப் News Lankasri
பிரித்தானிய விமான தளத்தில் அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள்- ஈரான் மோதல் சூழலில் பதற்றம் News Lankasri