உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இலங்கை மக்களின் மனநிலை என்ன..!
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உள்ளூர் அரசியல் சக்திகள் ஈடுபட்டதாக 50 வீதத்துக்கும் அதிகமான இலங்கையர்கள் நம்புவதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
2019 இல் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் உள்ளூர் அரசியல் சக்திகள் ஈடுபட்டதாக இலங்கை சனத்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அதாவது 53 வீதமாதனோர் நம்புவதாக ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
துவாரகா விடயத்தில் புலம் பெயர் மூன்று அமைப்புகளும் மௌனம்! குழப்பத்தில் மக்கள்: பகிரங்க குற்றச்சாட்டு
இந்த ஆய்வின்போது, தாக்குதல்களுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து நாட்டில் பேசப்படும் மூன்று கருத்துக்கள் வழங்கப்பட்டன, ஆபத்தான வெளிநாட்டுப் படைகளுடன் இணைந்து செயல்பட்ட இலங்கை தீவிரவாதிகளால் நடத்தப்பட்டது என்பது முதலாவது கருத்தாக வழங்கப்பட்டது.
உள்ளூர் அரசியல் சக்திகளுடன் இணைந்து செயல்படும் இலங்கை தீவிரவாதிகளால் நடத்தப்பட்டது என்பது இரண்டாவது கருத்தாக வழங்கப்பட்டது.
தீவிரவாதிகள் தாக்குதல்
மூன்றாவதாக, உள்ளூர் அரசியல் சக்திகளுடனும், ஆபத்தான வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து செயற்பட்ட இலங்கை தீவிரவாதிகளால் இந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன என்ற கருத்து வழங்கப்பட்டது.
இதில் 53 வீதமானோர் உள்ளூர் அரசியல் சக்திகள் சம்பந்தப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். இதன்படி 30 வீதமானோர் உள்ளூர் அரசியல் சக்திகளுடன் இணைந்து இலங்கை தீவிரவாதிகள் தாக்குதல் என்ற கருத்தை ஆதரித்துள்ளனர்.
23 வீதமானோர் மூன்றாவது கருத்தான உள்ளூர் அரசியல் மற்றும் வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்த இலங்கை தீவிரவாதிகள் இந்த கருத்தை தேர்ந்தெடுத்துள்ளனர் இதேவேளை 39வீதமானோர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |