பூண்டுலோயா - நுவரெலியா பிரதான பாதையை புனரமைத்து தருமாறு கோரி ஆர்ப்பாட்டம் (photos)
பூண்டுலோயாவிலிருந்து டன்சினன் வழியாக நுவரெலியா செல்லும் பிரதான பாதையை வெகுவிரைவில் புனரமைத்து தருமாறு வலியுறுத்தி இன்று (2023-03-12) பாரிய ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.
இதில் 12 தோட்டங்களை சேர்ந்த மக்களும் மதகுருமார்களும் கலந்துகொண்டு டன்சினன் பாதையின் விடியலுக்காக முன்னெடுக்கப்பட்ட பேரணிக்கு முழு ஆதரவையும் வழங்கினர்.
எதிர்ப்பு வசனங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியவண்ணம் கோஷங்களை எழுப்பியவாறும் கறுப்பு கொடிகளை தாங்கியவாறும் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்திற்கு ஆதரவு
பூண்டுலோயா கிகிலியாமான 3ஆம் கட்டை பகுதியிலிருந்து ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்ட பேரணி டன்சினன் காந்திபுரம், டன்சினன் மத்திய பிரிவு, டன்சினன் கீழ்பிரிவு, சீன் கீழ்பிரிவு ஊடாக பூண்டுலோயா பேருந்து தரிப்பிடத்தை வந்தடைந்தது.
அதன்பின் போராட்ட ஏற்பாட்டுக்குழுவால் ஊடக சந்திப்பொன்றும் நடத்தப்பட்டது.
அத்தோடு பூண்டுலோயா நகரங்களில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு
இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.








கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri
