இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்கக்கோரி போராட்டம் நடத்தும் தமிழக மீனவர்கள்
இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட 54 தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ராமேஸ்வரம் மீனவர்கள் ஆரம்பித்துள்ளனர்
ராமேஸ்வரத்திலிருந்து நேற்று 570 விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
அவர்கள் நள்ளிரவில் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், 6 விசைப்படகுகளுடன் 42 மீனவர்களை கைதுசெய்தனர்.
கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.
இதனிடையே நெடுந்தீவு அருகே வைத்து மேலும் 12 தமிழக மீனவர்கள் இலங்கையின் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது