குவைட் விமான சேவையுடன் கூட்டிணையப் போகும் ஶ்ரீலங்கன் விமான சேவை
ஶ்ரீலங்கன் விமான சேவை மற்றும் குவைட் விமான சேவை என்பன கூட்டிணைந்து விமான சேவைகளை முன்னெடுக்க இணக்கம் காணப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் கடந்த ஜூன் மாதம் 20ம் திகதி தொடக்கம் இதற்கான பரீட்சார்த்த முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் எந்தவொரு விமானப் பயணியும் தனது பிரயாண முடிவிடத்துக்காக கொள்வனவு செய்யப்படும் விமான சேவை டிக்கட்டைக் கொண்டு இந்த இரண்டு விமான சேவைகளில் ஏதேனும் ஒன்றில் குறித்த பயண முடிவிடத்தைச் சென்றடைய முடியும்.
விமான சேவை விஸ்தரிப்பு
ஐரோப்பிய நாடொன்றுக்காக விமான டிக்கட் கொள்வனவு செய்யும் தென்கிழக்காசிய பயணிகள் கொழும்பு ஊடாக குவைட் சென்று அங்கிருந்து குவைட் விமான சேவை ஊடாக ஐரோப்பிய நாடுகளை சென்றடையலாம்.
அதே போன்று தென்கிழக்காசிய நாடுகளுக்கான ஐரோப்பிய பயணிகள் குவைட் ஐ வந்தடைந்து ஶ்ரீலங்கன் விமான சேவை ஊடாக தமது பயணத்தைத் தொடரலாம்.
இதன் மூலம் உலகின் பல்வேறு பயண முடிவிடங்களுக்கான தனது பயணப்பாதையை ஶ்ரீலங்கன் விமான சேவை விஸ்தரித்துக் கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது

Optical illusion: படத்தில் நூற்றுக்கணக்கான “7” களில் மறைந்திருக்கும் ”9” ஐ கண்டுபிடிக்க முடியுமா? Manithan
