கணிசமான அளவினால் வீழ்ச்சி அடைந்துள்ள பணவீக்கம்
கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் மதிப்பீட்டின் பிரகாரம் கடந்த ஆகஸ்ட் மாதம் 4 சதவீதமாகப் பதிவாகியிருந்த பணவீக்கம், செப்டெம்பர் மாதம் 1.3 சதவீதமாக கணிசமானளவினால் வீழ்ச்சியடைந்துள்ளது.
அதன்படி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 4.8 சதவீதமாகப் பதிவான உணவுப்பணவீக்கம் செப்டெம்பர் மாதம் 5.2 சதவீதமாகவும், ஆகஸ்ட்டில் 8.7 சதவீதமாகப் பதிவான உணவல்லாப் பணவீக்கம் செப்டெம்பர் மாதம் 4.7 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது.
அவதானிக்கப்பட்ட சதவீத அதிகரிப்பு
மேலும், கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின் மாதாந்த மாற்றம் செப்டெம்பர் மாதத்தில் 0.88 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.
இதற்கு உணவுப்பொருட்களின் விலைகளில் அவதானிக்கப்பட்ட 0.18 சதவீத அதிகரிப்பும், உணவல்லாப்பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள், கட்டணங்களில் அவதானிக்கப்பட்ட 0.70 சதவீத அதிகரிப்பும் காரணமாக அமைந்துள்ளன.

அதேவேளை, பொருளாதாரத்தின் அடிப்படை பணவீக்கத்தை பிரதிபலிக்கின்ற மையப் பணவீக்கம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பதிவான 4.6 சதவீதத்திலிருந்து செப்டெம்பரில் 1.9 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
வலுவான எதிர்பார்க்கைகள் மற்றும் பொருத்தமான கொள்கை வழிமுறைகள் மூலம் பணவீக்கமானது நடுத்தர காலத்தில் நடு ஒற்றை இலக்க மட்டத்தை எட்டி, ஸ்த்திரநிலையை அடையும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
காமெனியின் படுகொலை... உலகம் மொத்தம் பீதியை ஏற்படுத்திய ஈரானிய மூத்த மதகுருவின் அழைப்பு News Lankasri
சரவணன் சொன்ன வார்த்தை குமுறலில் மயில் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கான மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் Cineulagam
இலங்கை அருகே... ஈரான் கப்பல் மீது நீர்மூழ்கியால் தாக்குதல் நடத்தியதை அறிவித்த அமெரிக்கா News Lankasri
சிந்தாமணியால் சிக்கலில் சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam