வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்காக விசேட வாடகை வாகன சேவை
இலங்கைக்கு இந்த வருட இறுதிக்குள் 15 இலட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை வரவழைப்பதற்கான ஊக்குவிப்பு வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்தார்.
பொறுப்புவாய்ந்த அரசாங்கம் என்ற வகையில் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுலாப் பயணிகளுக்கு அசௌகரியங்களைத் தவிர்ப்பதற்காக விசேட வாடகை வாகன சேவை நிறுவுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
சுற்றுலா பயணிகள்
நிலையான நாட்டிற்கு ஒரு வழி என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டிற்கு அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நகரங்களை தூங்கா நகரங்களாக மாற்ற வேண்டியதன் அவசியத்தையும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
சிந்தாமணியால் சிக்கலில் சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
காமெனியின் படுகொலை... உலகம் மொத்தம் பீதியை ஏற்படுத்திய ஈரானிய மூத்த மதகுருவின் அழைப்பு News Lankasri
தங்களது மனைவியுடன் அய்யனார் துணை சீரியல் சகோதரர்கள்... என்ன செய்துள்ளார்கள் பாருங்க, கலாட்டா கன்பார்ம் Cineulagam
சரவணன் சொன்ன வார்த்தை குமுறலில் மயில் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கான மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் Cineulagam