இலங்கை எதிர்நோக்குவது கடன் பொறி அல்ல: சீனத் தூதுவர் விளக்கம்
இலங்கையும் பிராந்தியமும் இன்று எதிர்நோக்குவது 'கடன் பொறி' அல்ல மாறாக 'அபிவிருத்தியற்ற பொறி' என சீனத் தூதுவர் குய் தெரிவித்தார்.
மேலும் இலங்கை எப்போதும் சீனாவின் நண்பராக இருந்து வருகிறது மற்றும் சீனாவின் முக்கிய நலன்களுடன் தொடர்புடைய பிரச்சினைகளில் சீனாவுக்கு ஆதரவாக நிற்கிறது என அவர் குறிப்பிட்டார்.
எனினும் இலங்கையின் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதில் சீனா இன்னும் முழுமையாக ஈடுபாட்டை காட்டவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
உயர்மட்ட இராஜதந்திரிகள் கலந்துரையாடல்
இலங்கையுடன் 'கடன் இராஜதந்திரம்' என்று அழைக்கப்படும் குற்றச்சாட்டை மறுப்பதற்கு ஒவ்வொரு வாய்ப்பையும் அது பயன்படுத்திக்கொள்கிறது.
கடந்த செவ்வாயன்று, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனையின் பேரில் புவிசார் அரசியல் உயர்மட்ட குழு கலந்துரையாடல் ஒன்று, கொழும்பில் உள்ள சில உயர்மட்ட இராஜதந்திரிகள் மத்தியில் நடத்தப்பட்டது.
இதில் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, சீனத் தூதுவர் கி ஜென்ஹாங்,
பிரான்ஸ் தூதுவர் ஜீன்-பிரான்கோயிஸ் பெக்டெட் மற்றும் ஜப்பானியத் தூதுவர்
ஹிடேக்கி மிசுகோஸி ஆகியோர் பங்கேற்றனர்.
பொலிஸாரின் முன்னிலையில் கஜேந்திரன் மீதான தாக்குதல்: சுமந்திரன் விடுத்துள்ள வேண்டுகோள் - செய்திகளின் தொகுப்பு (Video)
இதன்போது இலங்கையும் பிராந்தியமும் இன்று எதிர்நோக்குவது 'கடன் பொறி' அல்ல, மாறாக 'அபிவிருத்தியற்ற பொறி' என்பதை சீனத் தூதுவர் குய் ஆரம்பத்திலேயே தெளிவுபடுத்தினார்.
சீனா எப்போதுமே இலங்கையின் மூலோபாய மற்றும் நம்பகமான பங்காளியாக இருந்து வருகிறது. மேலும் இலங்கை எப்போதும் சீனாவின் நண்பராக இருந்து வருகிறது மற்றும் சீனாவின் முக்கிய நலன்களுடன் தொடர்புடைய பிரச்சினைகளில் சீனாவுக்கு ஆதரவாக நிற்கிறது.
இலங்கையின் இறையாண்மை, சுதந்திரம் மற்றும் தேசிய கௌரவத்தைப் பாதுகாப்பதில் சீனாவும் உறுதியாக ஆதரவளிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
பொருளாதார வளர்ச்சி
சீனத் தூதருக்கு அடுத்தபடியாக அமர்ந்திருந்த இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே, பொருளாதார வளர்ச்சியைப் பொறுத்தவரை இந்தியா ஒரு 'வல்லமையம்' என்று வலியுறுத்தினார்.
இந்தியாவின் இந்த விரைவான வளர்ச்சி மற்றும் மாற்றம் தொழில்நுட்ப முன்னேற்றத்தினால் ஏற்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் இந்தியா மற்றும் அதன் தலைமையின் தற்போதைய முயற்சியை பொறுத்தவரை, பிராந்தியத்தின் பங்கை மீண்டும் நிலைநாட்டுவது மற்றும் பிற ஒத்த எண்ணம் கொண்ட பங்காளிகளுடன் இணைந்து செயல்படுவது என்பதாகும் என்று பாக்லே தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |