வயலுக்குள் கற்களை பரப்பி விவசாய நடவடிக்கையை தடுக்கும் தொல்பொருள் திணைக்களம்: தாயொருவர் பகிரங்க குற்றச்சாட்டு (VIDEO)
முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தினர் தனது வயலுக்குள் கற்களை பரப்பி விவசாயம் செய்யவிடாது தடுத்து இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளதாக தாயொருவர் குற்றம்சுமத்தியுள்ளார்.
தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியில் தமிழ் மக்களினுடைய பூர்வீக காணிகள் தொல்பொருள் திணைக்களத்தினால் அபகரிக்கப்பட்டுள்ளது.
இந்த அபகரிப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
எங்களுடைய காணிகளை பிடித்து வைத்திருக்கிறார்கள். நாங்கள் இடம்பெயர்ந்து சென்று பல வருடங்களாகியும் விவசாயம் செய்யும் காணிகளை கூட தடை செய்திருக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
தொல்பொருள் திணைக்களத்தினால் அபகரிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் நேற்றையதினம் (28.08.2023) அரசியல் தலைவர்கள் மற்றும் அரச அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் விஜயம் செய்து நிலைமைகளை நேரில் அவதானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 40 நிமிடங்கள் முன்

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளாதாரத் தடை - இந்திய நிறுவனமும், இந்திய வம்சாவளி கேப்டனும் நேரடி பாதிப்பு News Lankasri

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam
