இலங்கை பொருளாதாரத்தின் வங்குரோத்து நிலை: வெளியாகிய முக்கிய தகவல்-செய்திகளின் தொகுப்பு
இலங்கை வங்குரோத்து அடைந்த நாடாக மாற்றமடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
ஸ்டான்டர்ட் என்ட் புவர் (standard and poor's - S&P) என்னும் சர்வதேச கடன் தரப்படுத்தல் நிறுவனம் இலங்கையை டி தரத்திற்கு தாழ்த்தியுள்ளதாகவும், இது வங்குரோத்து நிலையை பிரதிபலிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த 2021ம் ஆண்டு முதல் சில அரசியல்வாதிகள், தொழில்வாண்மையாளர்கள் மற்றும்
வர்த்தகர்கள் கடன் செலுத்த வேண்டாம் என கோரியதாகத் தெரிவித்துள்ளார்.
கடன் செலுத்தாது அந்நிய செலாவணியை சேமித்துக் கொள்ளுமாறு கோரியதாக அவர்
தெரிவித்துள்ளார்.
எனினும் அந்த காலத்தில் அரசாங்கம் கடனை ஏதோ ஓர் வகையில் செலுத்தியதாகவும், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 12ம் திகதி வரையில் கடன் செலுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய காலை நேர செய்திகளின் தொகுப்பு,