மத்திய வங்கி ஆளுநர் மக்களுக்கு விடுத்துள்ள அறிவுறுத்தல் : செய்திகளின் தொகுப்பு
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பை செயற்படுத்துவதற்கான காலம் ஒன்று அவசியமாக உள்ளதனால், எதிர்வரும் 30 ஆம் திகதி வங்கிகளுக்கு விசேட விடுமுறை வழங்கப்படுவதாக மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (25.06.2023) இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
ஹஜ் பெருநாள் காரணமாக (29.06.2023) ஆம் திகதி மூடப்படும் வங்கிகள், எதிர்வரும் (03.07.2023) திகதி வரை மூடப்பவுள்ளன.
இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பாக மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் குறிப்பிடுகையில், இந்த விடுமுறையில் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பை செயற்படுத்துவதற்கு தயாராகவுள்ளோம்.
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தேசிய வங்கி கட்டமைப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. குறித்த விடுமுறையில் வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம் இயந்திரங்களின் ஊடாக வைப்புக்களை, வழமை போல் முன்னெடுக்க முடியும் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான காலைநேர செய்திகளின் தொகுப்பு....
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
அண்ணாமலைக்கு தெரியவந்த வீட்டை அடமானம் வைத்த விஷயம், மனோஜிற்கு கொடுத்த தண்டனை... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
10 நாட்களாக வலியில் துடித்துள்ள கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி... அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam