ஸ்ரீலங்கன் நிறுவனத்திற்கு சொந்தமாக விமானங்கள் இல்லை-நிமல் சிறிபால டி சில்வா
மத்தள மகிந்த ராஜபக்ச சர்வதேச விமான நிலையம் மாதம் 100 மில்லியன் ரூபா நஷ்டத்தில் இயங்குவதாக சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
முதலீட்டாளர் ஒருவர் மத்தள விமான நிலையத்தில் முதலீடு செய்ய விரும்பினால், அரசாங்கம் அதனை ஆராயும் எனவும் அமைச்சர் நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார்.
பலாலி மற்றும் இரத்மலானை விமான நிலையங்களை திட்டமிடப்படி பிரயோசனப்படுத்த முடியவில்லை

கொரோனா தொற்று நோய் மற்றும் நாடு முழுவதும் பரவிய போராட்டங்கள் காரணமாக விமான பயணங்கள் குறைந்தன. இரத்மலானை மற்றும் பலாலி விமானங்களை திட்டமிட்டப்படி முற்றாக பிரயோசனப்படுத்த முடியாமல் போயுள்ளது.
பலாலி விமான நிலையத்திற்கான சேவைகளை நடத்துவதாக சில விமான சேவை நிறுவனங்கள் வாக்குறுதி வழங்கின. எனினும் ஒரு விமானம் கூட அங்கு வரவில்லை. எயார் இந்தியா நிறுவனம் பலாலிக்கான சேவையை நடத்த இணங்கியது. எனினும் அது நடக்கவில்லை.

மாலைதீவு விமான சேவை நிறுவனத்துடன் இணைந்து இரத்மலானை விமான நிலையத்திற்காக முன்னெடுக்கப்பட்ட திட்டமும் தோல்வியடைந்துள்ளது.
ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் இதுவரை 1.2 பில்லியன் அமெரிக்க டொலர் நஷ்டத்தை சந்தித்துள்ளது. அந்த நிறுவனத்தை மறுசீரமைப்பதற்கான அமைச்சரவை பத்திரம் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் நிறுவனத்திடம் இருக்கும் 23 விமானங்களும் குத்தகைக்கு பெறப்பட்டவை

அத்துடன் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானங்கள் எதுவுமில்லை. சேவையில் ஈடுபடுத்தப்படும் 23 விமானங்களும் குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்டவை எனவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.
சோழனை நம்பாமல் சேரன், பாண்டி செய்த காரியம், ஆனால் நிலா... அட்டகாசமான அய்யனார் துணை சீரியல் Cineulagam
கோமதியிடம் அடுத்த குண்டை தூக்கிப்போட்ட மீனா, இனி நடக்கப்போவது என்ன... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஈரான் மீது மீண்டும் குண்டு வீச்சு... அடுத்த வாரத்தில் முடிவெடுக்க இருப்பதாக ட்ரம்ப் பேச்சு News Lankasri
முக்கியமான ஆதாரத்தை கைப்பற்றிய முத்து, சிக்கப்போவது ரோஹினியா, சிந்தாமணியா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam