இரத்மலானை விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானங்களால் பெருந்தொகை வருமானம்
ஐரோப்பிய நாடுகளில் விவசாய மற்றும் தீயணைப்பு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் மூன்று அவுஸ்திரேலிய ஏர் டிராக்டர் AT-802 AT-802 விமானங்கள் இரத்மலானை, கொழும்பு விமான நிலையத்தை வந்தடைந்துள்ளன.
கோடை காலத்தில் ஐரோப்பிய காடுகளில் ஏற்படும் காட்டுத்தீயை கட்டுப்படுத்துவதற்காக அவுஸ்திரேலியாவில் இருந்து துருக்கி செல்லும் வழியில் கொழும்பு விமான நிலையத்தை வந்தடைந்ததாக இரத்மலானை விமான நிலைய முகாமையாளர் அருண ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அதன் கீழ் (Air Tractor) AT-802 VH-JQW, மற்றும் VH-FZV, VH-CKS ஆகிய விமானங்கள் நாட்டை வந்தடைந்துள்ளன.

விமானங்களால் கிடைக்கப்பெற்றுள்ள வருமானம்
இந்த விமானங்களுக்காக சர்வதேச விமானங்கள் இரத்மலானைக்கு வருகை தந்தமை நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் பிரச்சினைக்கு நல்ல வருமானம் கிடைத்துள்ளதாகவும் விமான நிலைய முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த மூன்று விமானங்களின் வருமானம் 12,000 டொலர்கள் எனவும், இந்த விமானம் நாட்டில் ஒரு நாள் நிறுத்தப்படும் எனவும் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் காலங்களில் பல வர்த்தக விமானங்கள் இரத்மலானை விமான நிலையத்திற்கு வருகை தரவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
பிரித்தானியாவில் பிறந்த பிள்ளைகளும் நாடுகடத்தப்படலாம்: அடிமடியில் கை வைக்கும் உள்துறைச் செயலரின் திட்டம் News Lankasri
உக்ரேனிய, ஐரோப்பிய பங்களிப்பு இல்லாமல் போர் ஒப்பந்தம் செல்லாது: ஐரோப்பிய ஒன்றியம் போர்க்கொடி News Lankasri