வீதி விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலி: பொலிஸ் சாரதிக்கு விளக்கமறியல் (Video)
தலைமன்னார் பிரதான வீதி - தாராபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தின்போது கைது செய்யப்பட்ட பொலிஸ் வாகன சாரதியை, எதிர்வரும் (9.1.2023) ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இவ்விபத்து சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மன்னார் பனங்கட்டுகொட்டு பகுதியை சேர்ந்த இளம் குடும்பஸ்தரான ஆனந்த் கன்பியூசியஸ் விஜய் (வயது 32) என்பவரே உயிரிழந்துள்ளார்.
வாகனத்தின் சாரதி கைது
மன்னாரில் இருந்து பேசாலை நோக்கி பயணித்த பொலிஸ் டிபென்டர் ரக வாகனமும், பேசாலை வீதியூடாக மன்னார் நோக்கி மோட்டார் சைக்கிலும் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு நோயாளர்காவு வண்டி மூலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு
கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
எனினும் குறித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

விஜய் திரைப்பட வியாபாரங்களில் இதுதான் Highest.. பல கோடிக்கு விற்பனை ஆன ஜனநாயகன் தமிழக உரிமை Cineulagam
