வெளிநாடொன்றில் இலங்கை பிரஜை கைது
தாய்லாந்தின் சுவர்ணபூமி விமான நிலையத்தில் இலங்கை பிரஜை ஒருவர் அந்நாட்டு சுங்க அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
உயிருள்ள காட்டு விலங்குகளை கடத்த முயன்ற குற்றச்சாட்டில் இலங்கை பிரஜை ஒருவரும், இந்திய பிரஜை ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுவர்ணபூமி விமான நிலையத்தில் சர்வதேச விமானங்களில் மேற்கொள்ளப்பட்ட மேம்பட்ட பாதுகாப்பு சோதனைகளின் விளைவாக, உயிருள்ள காட்டு விலங்குகளை கடத்த முயன்ற குறித்த இருவரும், கைது செய்யப்பட்டுள்ளனர்,
மேலும் இந்தியா மற்றும் இலங்கைக்கு அனுப்பப்படவிருந்த உயிரினங்களை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
CITES மேலாண்மை ஆணையத்தின் வனவிலங்கு மற்றும் தாவர பாதுகாப்பு பிரிவின் இயக்குனர் மற்றும், சுவர்ணபூமி விமான நிலையத்தில் உள்ள வனவிலங்கு ஆய்வு நிலையத்தின் தலைவரிடமிருந்து இரண்டு தனித்தனி வனவிலங்கு கடத்தல் சம்பவங்களை விவரித்து அறிக்கைகளைப் பெறப்பட்டுள்ளன.
அதில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.
இந்திய பிரஜை
மே 26 ஆம் திகதி இரவு, இந்தியாவின் பெங்களூருவிலிருந்து வந்த தாய் ஏர்வேஸ் விமானம் TG326 இலிருந்து திரும்பிய பொதிகளை அதிகாரிகள் சோதனைசெய்துள்ளனர்.
இதில் அதிகாரிகள் 20 உயிருள்ள blue iguanas மற்றும் 2 ulcata tortoises ஆமைகளை பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த பொதி TG325 விமானத்தில் பாங்காக்கிலிருந்து இந்தியாவுக்கு பயணிக்க முயன்ற ஒரு இந்திய பயணியுடையது என்பது விசாரணையில் தெரியவந்தது.
இலங்கை பிரஜை
மேலும், சுவர்ணபூமியில் இருந்து கொழும்புக்கு ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் விமானத்தில் UL405 இல் ஏற முயன்ற ஒரு இலங்கை பயணியை அதிகாரிகள் கைது செய்தனர்.
சந்தேக நபரின் சாமான்களில் 2 உயிருள்ள Hyacinth Macaws, 2 உயிருள்ள meerkats மற்றும் 1 உயிருள்ள prairie dog ஆகியவை மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
தாய்லாந்தின் வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புச் சட்டம், சுங்கச் சட்டம் மற்றும் விலங்கு தொற்றுநோய்ச் சட்டத்தின் கீழ் இரண்டு சந்தேக நபர்களும் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர்.
வழக்குகள் சுவர்ணபூமி விமான நிலைய பொலிஸ் நிலையத்தில் உள்ள புலனாய்வாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
நாட்டின் வனவிலங்கு வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதற்கான இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கொள்கைக்கு இணங்க, சட்டவிரோத வனவிலங்கு இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளை கண்டிப்பாக ஒடுக்குவதற்கு தொடர்புடைய நிறுவனங்களுடன் ஒத்துழைப்பதற்கான தேசிய பூங்காக்கள், வனவிலங்கு மற்றும் தாவர பாதுகாப்புத் துறையின் உறுதிப்பாட்டை இந்த வெற்றிகரமான நடவடிக்கைகள் பிரதிபலிக்கின்றன” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.




கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

படங்களில் வில்லன் வாழ்க்கையில் ஹீரோ.. கோட்டா ஶ்ரீனிவாச ராவ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? Manithan

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் உண்மையை கூறிய அரசி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு புரொமோ Cineulagam

பிடிவாதத்தால் எதையும் சாதிக்கும் பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
