இராணுவ மேஜரொருவர் ஹபரண பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பின் கைது
ஹபரணையில், வனவிலங்கு துறை அதிகாரிகள் குழுவுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இலங்கையின் இராணுவ மேஜர் ஜெனரல், ஹபரண பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து மேஜர் ஜெனரல் கெக்கிராவை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
மினேரியா தேசிய பூங்காவில் கடமையிலிருந்த வனவிலங்கு அதிகாரியைத் தாக்கியதாகக் கூறப்படும் இராணுவ அதிகாரி மற்றும் இராணுவத்தின் ஏனைய உறுப்பினர்களை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கெகிராவ நீதிவான் சமன் வெரானியகொட நேற்று உத்தரவிட்டிருந்தார்.
இந்த சம்பவம் குறித்து விசாரிக்க இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இரண்டு மேஜர் ஜெனரல்கள் தலைமையிலான விசாரணை சபையை அமைத்துள்ளார்.





போலியான திருமணம்... நாடுகடத்தப்பட்ட புலம்பெயர் நபர் பிரித்தானியாவில் குடும்ப விசாவிற்கு விண்ணப்பம் News Lankasri

ஜெயிலர் 2 இன்னும் ரிலீஸ் ஆகல.. அதுக்குள்ள ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு! என்ன தெரியுமா Cineulagam

Gen Z போராட்டக்காரர்களுடன் இணைந்த ராணுவம் - நேபாளத்தையடுத்து மற்றொரு நாட்டில் ஆட்சி கவிழ்ப்பு? News Lankasri

ஜீ தமிழின் கெட்டி மேளம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் தகவல்... என்ன இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்க Cineulagam
