தாமதமான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம்: வெளியான காரணம்
விமானியின் சுகவீனம் காரணமாகவே தென் கொரியாவின் சியோல் நகருக்கான விமானம் தாமதமடைய நேரிட்டதாக ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை விளக்கமளித்துள்ளது.
கடந்த நேற்று முன்தினம் (20.06.2023) இரவு 8.20 மணியளவில் கட்டுநாயக்காவில் இருந்து சியோல் நோக்கிப் புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் விமானத்தின் இரு விமானிகளில் ஒருவர் திடீர் சுகயீனமடைந்ததாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கொரியாவில் வேலைவாய்ப்பு
விமானிகளின் ஓய்வு மற்றும் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு விதிமுறைகள் காரணமாக நேற்று (21.06.2023) வரை மற்றுமொரு விமானியை அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டிருந்ததாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
குறித்த விமானத்தின் தாமதம் காரணமாக தென்கொரியாவில் வேலைவாய்ப்புப் பெற்றுச் செல்லவிருந்த சுமார் 80 பேரை தென்கொரியா நிராகரித்துள்ளது.
அவர்களை மீண்டும் அனுப்பி வைப்பதற்கான முயற்சிகள் இராஜதந்திர மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
