கொரியாவுடனான நேரடி விமான சேவை விரைவில்: மனுஷ நாணயக்கார
அடுத்த இரண்டு மாதங்களில் கொரியாவுடனான நேரடி விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று(21.06.2023) உரையாற்றும்போதே குறித்த விடயத்தை தெரிவித்திருந்தார்.
கொரிய வேலைவாய்ப்புகளுக்கு தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் யுஎல் 470 என்ற விமானம் நேற்று சுமார் 12 மணி நேரம் தாமதமானது.
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் தாமதம்
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர,
கொரியாவுக்கு தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் தொடர்ந்து தாமதமாகி வருவதால், கொரிய வேலைகளுக்கு பணியாளர்களை அனுப்புவது பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது.
இந்தத் தொழிலாளர்கள் வழியாக இந்த விமானம் செயற்படுகிறது. இது குறித்து பலமுறை தெரிவித்தும், இந்த தாமதம் மீண்டும் மீண்டும் மேற்கொள்ளப்படுகிறது.
நேற்று கொரியா செல்லவிருந்த 800வது குழு இந்த பயணத்தை இரத்து செய்தது. இந்த விமான தாமதம் இதற்கு முன் மூன்று முறை இடம்பெற்றுள்ளது.'' என தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |