இந்தியாவின் அடுத்த இலக்காக மாறிய ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ்!
இந்தியாவின் ‘டாடா 'குழுமத்திற்கு, ஸ்ரீலங்கன் விமான சேவையை கையளிப்பது தொடர்பில், அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடல்கள் ஆரம்பமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் இதனை தெரிவித்துள்ளார்.
மறுசீரமைப்பது தொடர்பில் அவதானம்
இந்தியாவின் மிகப் பெரிய வணிகக் குழுமமான 'டாடா நிறுவனம்' ஏர் இந்தியா, விஸ்தாரா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஏர் ஏசியா ஆகிய விமான நிறுவனங்களை தன்வசம் கொண்டுள்ளது.
இந்தநிலையில், குறித்த நிறுவனம் ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் மீதும் கவனம் செலுத்தி வருவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை மறுசீரமைப்பது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.