ரஷ்யாவிற்கான விமான சேவை நிறுத்தம்! - ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவிப்பு
கொழும்புக்கும் மொஸ்கோவிற்கும் இடையிலான விமான சேவைகள் இன்று (28) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மறுஅறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.
உக்ரைன் - ரஷ்யா இடையேயான முதல் கட்ட பேச்சுவார்த்தை பெலாரஸ் நாட்டின் எல்லை நகரமான கோமலில் கடந்த மாதம் 28ம் திகதி நடைபெற்றது.
சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற அந்த முதற்கட்ட பேச்சுவார்த்தையில், எந்த உறுதியான முடிவும் எடுக்கப்படவில்லை. அதன் தொடர்ச்சியாக, கடந்த 3ம் திகதி இரு நாட்டு பிரதிநிதிகளுக்கும் இடையே இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அதன்பிறகு மூன்றாம், நான்காம் கட்ட பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஆக்கப்பூர்வமான முடிவுகள் எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், ரஷ்யா - உக்ரைன் ஆகிய நாடுகள் இடையே துருக்கியில் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இந்த பேச்சுவார்த்தை வருகிற 30ம் திகதி முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இவ்வாறான நிலையிலேயே, கொழும்புக்கும் மொஸ்கோவிற்கும் இடையிலான விமான சேவைகள் இன்று (28) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மறுஅறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.