ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஊழல்களை விசாரிக்க சிறப்பு குழு!
2010 தொடர்க்கம் 2025 க்கு இடையில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் லிமிடெட் மற்றும் விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் தனியார் லிமிடெட் ஆகியவற்றில் நடந்ததாகக் கூறப்படும் மோசடி, ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரிக்க ஜனாதிபதி சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க தலைமையில் இந்தக் குழு நியமிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்த முன்மொழிவை அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆய்வு மற்றும் மதிப்பீடு
நாட்டின் பொருளாதார வளத்திற்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் லிமிடெட் பங்களித்திருந்தாலும், அதைப் பராமரிக்க அரசாங்கம் அதிக செலவுகளைச் சுமக்க வேண்டியுள்ளது என்றும், நிறுவனத்தின் அதிக வருடாந்திர இழப்புகள் நாட்டின் பொருளாதாரத்தைத் தாங்குவதை கடினமாக்கியுள்ளதாகவும் தீர்மானத்தில் கூறப்படுகிறது.
மேலும், இந்த நிறுவனத்தை பொருளாதார ரீதியாக நன்மை பயக்கும், திறமையான மற்றும் உற்பத்தி செய்யும் அரசு நிறுவனமாக மாற்றுவதும், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வெற்றிகரமாகப் பராமரிப்பதும் பொதுமக்களின் விருப்பம் என்றும் தீர்மானம் தெரிவிக்கின்றது.
இதற்காக, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் தற்போதைய நிலைக்கு வழிவகுத்த காரணங்கள் குறித்து கடந்த காலத்தில் நடந்த பரிவர்த்தனைகள் மற்றும் நிகழ்வுகள் குறித்த முறையான ஆய்வு மற்றும் மதிப்பீடு நடத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதன்படி ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் அவர் மீது இலஞ்சம் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் பிறந்தவர்களை நாடுகடத்துவதுதான் அடுத்த வேலை: அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சூசகம் News Lankasri

ஸ்ருதியிடம் கேள்வி கேட்கப்போய் நன்றாக வாங்கி கட்டிக்கொண்ட ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
