ஷிரந்தியால் மகிந்த குடும்பத்திற்குள் ஏற்பட்டுள்ள குழப்பம்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது மனைவியை கைது செய்ய வேண்டாம் என ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்குமாறு மல்வத்து மகாநாயக்க தேரரிடம் கோரியதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் இதனை நிராகரித்த மகிந்த குடும்பத்தினர், இந்த தகவலை வெளியிட்டவர் யார் என்பது குறித்து ஆரா்ய்ந்து வருகின்றனர். இது தொடர்பில் விசாரணை நடத்துமாறும் குற்ற புலனாய்வு பிரிவினரை மகிந்த தரப்பினர் நாடியுள்ளனர்.
இவ்வாறான நிலையில் சர்ச்சைக்குரிய இந்த விடயம் தொடர்பில் குடும்பத்தினருக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகிந்த குடும்பத்திற்குள் முரண்பாடு
இதன் போது மகிந்தவுக்கும் அவர்களின் பிள்ளைகளுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. எனினும் மல்வத்து தேரரிடம் இது தொடர்பான உதவியும் தான் கோரவில்லை. இது குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என மகிந்த குறிப்பிட்டுள்ளார்.
அண்மைக்காலமாக ஊழல் மோசடியில் ஈடுபட்ட அரசியல்வாதிகளை கைது செய்யும் நடவடிக்கையை அநுர அரசாங்கம் மேற்கொண்ட வருகிறது.
நிதி மோசடி
இதன் காரணமாக முன்னாள் முதற்பெண்மணியான ஷிரந்தி ராஜபக்ச, சரசவிய என்ற அமைப்பின் ஊடாக பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், அது தொடர்பான விசாரணைகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன.
இந்த குற்றச்சாட்டின் கீழ் ஷிரந்தி கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், மகிந்த குடும்பத்திற்குள் குழப்ப நிலைகள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.