நெருக்கடியான சூழ்நிலையில் விமானங்களை கொள்வனவு செய்ய தயாராகி வரும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் 24 விமானங்களில் 11 விமானங்கள் அடுத்த ஒரு வருடத்திற்குள் குறைக்கப்படும் என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் சுதந்திர தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இவ்வாறு விமானங்களின் எண்ணிக்கை குறையும் பட்சத்தில் சர்வதேச விமான நிறுவனங்களுடன் போட்டியிட முடியாத நிலை ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய,ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான 24 விமானங்களில் எட்டு விமானங்கள் அடுத்த (2023) ஆண்டுடன் ரத்து செய்யப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போதைய தினசரி அட்டவணையைப் பராமரிக்க விமானங்களைப் பெறுவது கட்டாயமாகும். ஒரே நேரத்தில் பல வர்த்தக விமானங்களைப் பெற முடியாது என்பதால், கால அட்டவணைக்கு முன்னதாக பதிவு செய்வதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்களை கொள்வனவு செய்ய தயாராகி வருவதாகவும் அந்த கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.



