பெரும் இழப்பை சந்தித்துள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்: அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை
ஸ்ரீலங்கன் விமானச் சேவை மற்றும் விமான நிலையத்தை அரசாங்கத்திற்கு வரி செலுத்தும் மக்களுக்குச் சுமை இல்லாதவாறு முன்னெடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (8) பிரதமரிடம் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஸ்ரீலங்கன் விமானச் சேவை மற்றும் விமான நிலையத்தை அரசாங்கத்திற்கு வரி செலுத்தும் நிறுவனமாகவும் மக்களுக்குச் சுமை இல்லாதவாறு முன்னெடுப்பதற்குத் தேவையான பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
ஸ்ரீலங்கன் விமானச்சேவைக்கு ஆட்சேர்ப்பு
அதன் பிரகாரம் பயிற்சிகளுக்காக மேற்கொள்ளப்படும் வெளிநாட்டுப் பயணங்களை மட்டுப்படுத்தல், மிக அத்தியாவசியமான ஆட்சேர்ப்பை மட்டும் மேற்கொள்வது, அநாவசிய கொள்வனவுகளை மட்டுப்படுத்தல், சம்பளத் திருத்தம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குதல் போன்ற விடயங்களை மேற்கொள்ள இருக்கின்றோம்.
அதேவேளை, ஸ்ரீலங்கன் விமானச் சேவை நிறுவனம் 2024 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதி வரை இரண்டு அரச வங்கிகளுக்கும் 385.12 மில்லியன் டொலர் வழங்கப்பட வேண்டியுள்ளது.
அந்த வகையில் இலங்கை வங்கிக்கு 217.42 மில்லியன் டொலரும் மக்கள் வங்கிக்கு 167. 71 மில்லியன் டொலரும் கடனாக வழங்க வேண்டியுள்ளது.
எனினும் 2024 மார்ச் 31ஆம் திகதி வரை பெற்றோலியக் கூட்டுத் தாபனத்திற்குக் கடன் வழங்க வேண்டியதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |