தமிழ் மக்களுடன் தமிழ் தேசத்தை அங்கீகரிக்கின்ற ஒரு தீர்வை எட்டவேண்டும்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (VIDEO)

Gajendrakumar Ponnambalam Sri Lanka Politician Sri Lanka Government Of Sri Lanka Tamil diaspora
By Theepan Aug 18, 2022 07:35 AM GMT
Report

கடன் பொறிக்குள் விழுந்திருக்க கூடிய இலங்கை, தன்னை பாதுகாத்துக் கொள்வதற்கு ஒரு வழி இருக்கின்றது. தமிழ் மக்களுடன் தமிழ் தேசத்தை அங்கீகரிக்கின்ற ஒரு தீர்வை எட்டவேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

தமிழ் மக்களுடன் தமிழ் தேசத்தை அங்கீகரிக்கின்ற ஒரு தீர்வை எட்டவேண்டும்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (VIDEO) | Srilanka Worsened Gajendrakumar Ponnambalam

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,


''இலங்கையில் போர் முடிவுக்கு வந்து 13 வருடங்கள் தாண்டியும் போர்க்காலத்தில் இருந்த பொருளாதார நிலையை விட இலங்கையின் பொருளாதார நிலை மிக மோசமாகி உள்ளது.

இலங்கை அரசாங்கத்துக்கு இன்று இருக்கக்கூடிய வருமானத்தை விட புலம்பெயர் தமிழ் மக்களுடைய வருமானம் அதிகமாக இருக்கக்கூடிய நிலையில் உலகில் மிகப் பலமான நாடுகளில் புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

அவசர கால சட்டம் தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ரணிலிடம் முன்வைத்துள்ள கோரிக்கை 

ஒவ்வொரு நாட்டிலும் அரசாங்கத்துக்கு சுமையாக இல்லாமல் மிகச் சிறந்த ஒரு சமூகமாக இருக்கின்றனர். அந்த மக்களின் உதவிகளை முதலீடுகளை பெற்றுக் கொள்ளமுடியும்.

மேற்கத்தேய நாடுகள்

இந்த கடன் இல்லாமல் நாடு இருக்கக்கூடிய சந்தர்ப்பம் இருக்கவும், தமிழ் மக்களின் உரிமையை கொடுக்கக் கூடாது என்கின்ற இனவாத போக்கை கடைபிடிக்கின்ற சித்தாந்தமே இருக்கின்றது.

சர்வதேச ரீதியில் இருக்கக்கூடிய கடன் சுமைகளை மேற்கத்தேய மற்றும் இந்திய நாடுகளுடன் இணைந்து ஏதோ ஒரு வகையில் பொருளாதாரத்தை நிலைக்கு கொண்டு வரலாம் என கனவு காண்கின்ற நிலையில்தான் இலங்கை இருக்கின்றது.

தமிழ் மக்களுடன் தமிழ் தேசத்தை அங்கீகரிக்கின்ற ஒரு தீர்வை எட்டவேண்டும்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (VIDEO) | Srilanka Worsened Gajendrakumar Ponnambalam

இதுவரை காலமும் தமிழரை அழிக்க சீனாவின் காலில் விழுந்த நிலையை விட்டு தற்போது மேற்கத்திய மற்றும் இந்தியாவின் காலில் விழுகின்ற போக்கை சீனா பார்த்துக் கொண்டிருக்கப் போவதில்லை. சீனா தான் கொடுத்த கடனில் இருந்து இலங்கையை தப்பவிடாது.

சீனாவின் கப்பல் வருவதற்கு முதல் நாள் உளவு பார்ப்பதற்கென இந்தியா தன்னுடைய விமானத்தை இலங்கைக்கு வழங்கி இலங்கைத் தீவிலுள்ள பூகோளப் போட்டியை இன்னும் தீவிரமடைகின்ற நிலைமை உருவாக்கி இருக்கிறதேதவிர இந்த நடவடிக்கைகள் எதுவுமே தமிழ் மக்களுக்கு நன்மையை கொடுக்கக்கூடிய விடயம் அல்ல.

மாறாக, இருக்கக்கூடிய மக்களுக்கும் கடும் பாதிப்புகளையும் சவால்களையும் கொடுக்கின்ற நிலைமை தான் உருவாக்கும்.

ஒற்றை ஆட்சி முறை

எங்களைப் பொறுத்தவரை நாங்கள் சிங்கள மக்களுக்கு சொல்வது, இந்த நிலைமையில் இருந்து மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக, 74 வருடங்களாக ஒற்றை ஆட்சி என்கிற அடிப்படையிலேயே நியாயமற்ற தோற்றுப் போன கொள்கையை தொடர்ந்து கடைபிடிக்கின்றதனால் வரக்கூடிய விளைவுகளை சிங்கள மக்கள் சிந்திக்க வேண்டும்.

தமிழ், சிங்கள மற்றும் முஸ்லீம் மக்களிடையே பிரிவுகள் ஒன்றும் இல்லாமல் உள்நாட்டிலே எங்கள் ஒவ்வொருவரையும் மதிக்கக்கூடிய ஒவ்வொரு தேசங்களையும் ஏற்கக்கூடிய சந்தர்ப்பம் உருவாகினால் நாங்கள் இந்த பூகோளப்போட்டியில் எங்களுடைய நன்மைக்காகவும், பொது நன்மைக்காகவும் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும்.

அதை செய்யத் தவறினால் வெளி சக்திகள் தங்களுடைய தேவைகளை அடைவதற்கு எங்களுடைய பிரிவுகளை பயன்படுத்துகின்ற நிலைமையே தொடர்ந்து காணப்படும். தமிழ் மக்களுடைய உரிமைகளை வழங்கக்கூடாது.

தமிழ் மக்களுடன் தமிழ் தேசத்தை அங்கீகரிக்கின்ற ஒரு தீர்வை எட்டவேண்டும்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (VIDEO) | Srilanka Worsened Gajendrakumar Ponnambalam

தமிழ் தேசம் இலங்கை தீவில் இருப்பதை அங்கீகரிக்கக் கூடாது என்ற காரணத்தினால் இன அழிப்புக்குரிய போரை நடத்தி, தமிழ் மக்களின் உரிமைக்காக போராடிய விடுதலை அமைப்பை அழிப்பதற்கு தமிழ் மக்களையும் சேர்த்து அழிக்கின்ற வேலைத்திட்டத்திற்கு இலங்கை அரசாங்கத்திற்கு உதவி தேவைப்பட்டது.

அதில் முதலாவது ஆயுத தேவைக்கானத் நிதி, இரண்டாவது அரசியல் ரீதியான பாதுகாப்பு அதாவது சர்வதேச மட்டத்திலிருந்து வரக்கூடிய அழுத்தத்திலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்வதற்கான உதவியும் தேவைப்பட்டது.

இலங்கையில் 2005ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வந்த பின்னர், சீனா தன்னுடைய முத்துமாலை வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கும் பட்டுப்பாதை வேலைத்திட்டத்தை செய்வதற்கும் இலங்கை தீவில் விருப்பம் கொண்டிருந்தது.

தமிழ் மக்களுடன் தமிழ் தேசத்தை அங்கீகரிக்கின்ற ஒரு தீர்வை எட்டவேண்டும்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (VIDEO) | Srilanka Worsened Gajendrakumar Ponnambalam

சீனா கப்பல் வருகை

சீனா வழமையாக ஒரு நாட்டுக்குள் ஆதிக்கம் செலுத்துகின்ற போது அந்த நாட்டிற்குள் இருக்கும் மனித உரிமை மற்றும் ஜனநாயகம் சம்பந்தமாக கருத்து தெரிவிக்கமாட்டார்கள். சீனாவால் கிடைக்கின்ற உதவிகளைப் பெற்று இனவழிப்பு நடவடிக்கையை செய்வதற்கெடுத்த முடிவின் விளைவே இன்று சீனாவின் கப்பல் வருகையாகும்.

சீனாவினது செயற்பாடு இலங்கையை கடன் பொறிக்குள் தள்ளி விட்டுள்ளது. தனது பெயரை இலங்கைத் தீவில் தவிர்க்க முடியாதபடி கண்ணை மூடிக்கொண்டு கடன்களை வழங்கி, இலங்கை உண்மையில் கடனை கட்டலாமா என்பதை ஆய்வு செய்யாமலேயே அதற்கு மாறாக கடன்களை வழங்கினார்’’ என தெரிவித்துள்ளார்.

3ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

26 Apr, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Brentwood, United Kingdom

26 Mar, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, மெல்போன், Australia

21 Apr, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை

22 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், உருத்திரபுரம்

21 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Surrey, United Kingdom

24 Apr, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு

21 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், சாவகச்சேரி, கொழும்பு

22 Apr, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை, மாத்தளை, Scarborough, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சூரிச், Switzerland, கனடா, Canada

06 May, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Chevilly Larue, France

07 May, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், கோண்டாவில், Mississauga, Canada

22 Apr, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம் மேற்கு, Penang, Malaysia, Toronto, Canada

22 Apr, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில், கொக்குவில், Dortmund, Germany

24 Mar, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
கண்ணீர் அஞ்சலி

பூநகரி, யாழ்ப்பாணம்

22 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

22 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி, கொழும்பு, Bobigny, France

24 Apr, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vancouver, United States

19 Apr, 2024
மரண அறிவித்தல்

அராலி வடக்கு, Hattingen, Germany

21 Apr, 2024
மரண அறிவித்தல்

மந்துவில், மானிப்பாய், கந்தர்மடம், கொழும்பு, Burlington, Canada

20 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, சிவபுரம், வவுனிக்குளம், பாண்டியன்குளம், அனலைதீவு, Neuss, Germany, Oslo, Norway, சென்னை, India

22 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, Leicester, United Kingdom

04 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

19 Apr, 2024
மரண அறிவித்தல்

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, London, United Kingdom, Wales, United Kingdom

19 Apr, 2023
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US