நாட்டின் எதிர்காலம் மக்கள் கையில்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
ஐனநாயகத்தினை மதிக்ககூடிய ஸ்தரத்தன்மையினை எற்படுத்த கூடிய முதுர்ச்சி பெற்ற ஒரு பார்வை இல்லாத இடத்தில், மக்களுடைய கையில் தான் எதிர்காலம் தங்கியிருக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்டத்தில் எரிபொருள் பாவனையின் தட்டுப்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையுர்வு தொடர்பிலான யாழ்.மாவட்ட செயலாளருடான சந்திப்பு இன்று(29) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இந்த சந்திப்பில் கலந்துக்கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மக்களின் எதிர்ப்பு

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,“இந்த நாடாளுமன்றம் மக்களுடைய ஜனநாயகத்தில் வெளிப்படுத்துகின்ற தளம் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் ஒரு தேர்தல் நடைபெறமால் மக்களுடைய எதிர்ப்பு என்றதை எக்காரணம் கொண்டு நிறுத்த முடியாது.
எந்தவொரு நாடோ கட்டமைப்போ தங்களுடைய கடன் நிதியினை கடனுக்காக மற்றொரு நாட்டுக்கு வழங்குவது என்றால் ஆக குறைந்தது. அந்த கடனை மீள கட்டக்கூடிய நிலையினை உறுதிப்படுத்த வேண்டும். அதற்காக எந்தவொரு நாடும் நிதியினை கொடுக்கபோவது இல்லை.
நாட்டின் நிலவரம்

ஏனைய நாடுகள்,உலக வங்கி மற்றும் சர்வதே நாணய நிதியம் போன்றவை கூறுகின்றன இலங்கை நாட்டில் போதிய ஸ்ரதன்மையினை எற்படுத்துகின்ற போது தான் நிதியினை வழங்க சாத்தியப்படும் என்பதை நாங்கள் அறிய முடிகின்றது.
இந்த அரசாங்கம் எந்த காரணத்திற்காவும் பொறுப்பாக நடந்துகொள்ளபோவது இல்லை என்று தெரிய வருகின்றது. மக்கள் ஐனநாயகத்தினை நிலை நாட்டாதது வரைக்கும் பொருளாதார இன்னும் வீழ்ச்சியடைந்தே செல்லும்”என கூறியுள்ளார்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam