சர்வதேச சிலம்பம் போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்ற வீர வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா (Photos)
கடந்த வாரம் இந்தியாவின் பெங்களுரில் நடைபெற்ற முதலாவது சர்வதேச சிலம்பம் போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்து இலங்கைக்கு பெருமை சேர்த்த வீர வீராங்கனைகளை கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.
கொட்டகலை தனியார் விடுதியில் நேற்று (27.05.2023) சனிக்கிழமை, இலங்கை சிலம்பம் சம்மேளனத்தின் தலைவர் எஸ்.எ.கந்தசாமி நாயுடு தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வின் போது வீர வீராங்கனைகளின் சிலம்பம் நிகழ்வு ஒன்றும் இடம்பெற்றது.

முதலாவது சர்வதேச சிலம்பம் போட்டி
இதில் பதக்கங்கங்களை பெற்றுக் கொண்ட பெற்றோர்களும் கலந்துக் கொண்டிருந்தனர்.
முதலாவது சர்வதேச சிலம்பம் போட்டி, இலங்கை, இந்தியா, சுவிஸ்லாந்து, பெல்ஜியம், இத்தாலி, சிங்கப்பூர், மலேசியா, டுபாய், பங்களாதேஷ் ஆகிய நாடுகள் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.

இந்த முதலாவது சர்வதேச சிலம்பம் போட்டியில் இலங்கை வீர விராங்கனைகள் 9 தங்கம் உட்பட 69 பதங்கங்களை வெற்றிக் கொண்டுள்ளனர்.
இந்திய முதலாம் இடத்தையும் மூன்றாம் இடத்தை சுவிஸ்லாந்தும் பெற்றுக் கொண்டதாக இலங்கை சிலம்பம் சம்மேளனத்தின் பொது செயலாளரும் பிரதம பயிற்றுவிப்பாளருமான இராமர் திவாகரன் தெரிவித்தார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 3 மணி நேரம் முன்
'சங்கத்தில் பாடாத கவிதை அங்கத்தில் யார் தந்தது'.. நடிகை சைத்ரா அச்சரின் கிளாமர் புகைப்படங்கள் Cineulagam