இலங்கை மகளிர் கிரிக்கட் அணி படைத்த உலக சாதனை
இலங்கை மகளிர் கிரிக்கட் அணி உலக சாதனை படைத்துள்ளது.
மகளிருக்கான சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டியொன்றில் அதிகூடிய வெற்றி இலக்கினை எட்டிய அணி என்ற பெருமையை இலங்கை மகளிர் அணி பெற்றுக்கொண்டுள்ளது.
தென் ஆபிரிக்காவிற்கு எதிரான மூன்றாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் இந்த சதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
தென் ஆபிரிக்கா அணி
தென் ஆபிரிக்காவின் பொட்சிவ்ஸ்டோமில் நடைபெற்ற போட்டியில் தென் ஆபிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கட் இழப்பிற்கு 301 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இதில் அணித் தலைவர் லாவுரா வொல்வார்ட் 184 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 44.3 ஓவர்களில் 4 விக்கட் இழப்பிற்கு 305 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இலங்கை அணித் தலைவி
இலங்கை அணியின் சார்பில் அணித் தலைவி சமரி அத்தபத்து 139 பந்துகளில் 5 சிக்ஸர்கள் 24 பவுண்டரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 195 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.
மகளிருக்கான சர்வதேச கிரிக்கட் ஒருநாள் கிரிக்கட் போட்டியொன்றில் வீராங்கனை ஒருவர் பெற்றுக்கொண்ட அதிகூடிய மூன்றாவது மொத்த ஓட்ட எண்ணிக்கை சமரியினால் பெற்றுக்கொள்ளப்பட்ட 195 ஓட்டங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.