ராஜபக்ச குடும்பம் சொத்துகளை மறைத்து வைத்துள்ள நாடுகள் குறித்து தகவல்! ஸ்தம்பிதமடையும் நிலையில் இலங்கை
இலங்கை முழுவதும் ஸ்தம்பிதமடையக் கூடிய விளிம்பில் இருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ராஜபக்ச குடும்பத்தின் சொத்துகள் சீசெல்ஸ் போன்ற வரி சலுகை வழங்கப்படும் நாடுகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழில் வைத்து நேற்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
எரிபொருள் கப்பல்

மேலும் தெரிவிக்கையில், கடந்த 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாக வலு சக்தி அமைச்சர் கடந்த வாரம் தெரிவித்தார். எந்தவொரு கப்பலும் நாட்டை வந்தடையவில்லை.
| இலங்கையில் பலர் கண்முன்னே விழுந்து மரணிக்கலாம்! யாழில் பகிரங்க எச்சரிக்கை |
தற்போது அந்த கப்பல் இலங்கையின் எல்லையைத் தாண்டி கிருஸ்ணபட்டணம் பகுதிக்குச் சென்றுள்ளது. இலங்கைக்கு வருகை தந்த கப்பல் தற்போது இந்தியாவிலுள்ளது. இது உரிய விலைமனு கோரலின் அடிப்படையில் வரவழைக்கப்பட்ட கப்பல் அல்ல.
அவசர இறக்குமதியாளர்கள் ஊடாக நடுக்கடலில் காணப்பட்ட கப்பலே இவ்வாறு வரவழைக்கப்பட்டது. குறித்த கப்பல் இலங்கைக்கு வருமா இல்லையா என்பது பெரும் சந்தேகத்திற்குரியதாகவுள்ளது. எனவே முழு நாடும் ஸ்தம்பிதமடையக் கூடிய விளிம்பில் உள்ளது.
அமெரிக்காவிலுள்ள வங்கியொன்றின் பிணைமுறிகள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அவை ஜூலை 18ஆம் திகதி காலாவதியாகவுள்ளன. இவ்வாறிருக்க அரசாங்கம் கடனை மீள செலுத்த முடியாது என அறிவித்துள்ளது. இதன் காரணமாக அரசாங்கத்திற்கு எதிராக அமெரிக்க ரிசேர்வ் வங்கி வழக்கு தாக்கல் செய்துள்ளது.

ராஜபக்ச குடும்பத்தின் சொத்துகள்
ராஜபக்ச குடும்பம் மக்களின் சொத்துகளை கொள்ளையடித்துள்ளதாக குறித்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை சீசெல்ஸ் போன்ற வரி சலுகை வழங்கப்படும் நாடுகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கானது, 'ஜப்பானின் ஹிரோசிமா, நாகசாகி நரகங்களின் மீது மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதலை விட மோசமானது' என்று பொருளாதார நிபுணர்கள் எதிர்வு கூறியுள்ளனர். இன்று முழு நாடும், பொருளாதாரமும் வீழ்ச்சியடைந்துள்ளது. எமது பிள்ளைகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளனர்.

இளைஞர்களின் எதிர்காலம் தொடர்பில் நம்பிக்கையற்ற நிலைமையை தோற்றுவித்துள்ளனர்.
விவசாயிகள், மீனவர்கள், அரச சேவைகள் என அனைத்தும் முடங்கியுள்ளன. இடைக்கிடை பாடசாலைகளை மூடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது என்ன நாடு? இதனை நாம் மாற்ற வேண்டாமா? ஆட்சியாளர்கள் இதற்கு பொறுப்புகூற வேண்டாமா? இது இயற்கையாக தோற்றம் பெற்ற அழிவு அல்ல என குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி குண்டுவெடிப்பு ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியா? 2 வாரம் முன்பே எச்சரித்த LeT தளபதி News Lankasri
குணசேகரன் பற்றி வெளிவந்த ரகசியம், கடும் ஷாக்கில் பெண்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
Numerology: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்ப துன்பங்களை மறந்து வாழ்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan