இலங்கையில் பலர் கண்முன்னே விழுந்து மரணிக்கலாம்! யாழில் பகிரங்க எச்சரிக்கை
நாடு மிக மோசமாக நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது, அத்தியாவசிய உணவு, மருந்துகளுக்கு கூட பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, இந்த நிலை நீடித்தால் பசியாலும் மருந்தில்லாமலும் பலர் கண்முன்னே விழுந்து மரணிக்க நேரிடலாம் என ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார திசாநாயக்க எச்சரித்துள்ளார்.
ஜே.வி.பியின் யாழ்ப்பாண மாவட்ட மாநாடு யாழில் உள்ள தனியார் விடுதியில் நேற்று இடம்பெற்றிருந்தது. இதில் தலைமை தாங்கி கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில், இந்த மோசமான நிலைக்கு தற்போதுள்ள ஆட்சியாளர்களே பொறுப்பு. எனினும் இந்தப் பொறுப்பைத் தட்டிக்கழித்து அவர்கள் தப்பிக் கொள்ள முயற்சிக்கின்றனர்.
இந்நிலையில் இந்த நிலைக்கு காரணமானவர்களுக்கு எதிராக வடக்கு, கிழக்கு, தெற்கு மற்றும் தமிழ், சிங்களம், முஸ்லிம் என்ற பேதங்களை கடந்து போராடி எதிர்கால சந்ததியை பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,