கொழும்பில் இளைஞரொருவர் வெள்ளை வானில் கடத்தப்பட்டு கொடூரமான முறையில் கொலை
கொழும்பு - மாளிகாவத்தை பகுதியில் இளைஞரொருவர் வானில் கடத்திச்செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெமட்டகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தெமட்டகொட லக் ஹிரு செவன அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 24 வயதுடைய இளைஞரே இவ்வாறு வானில் கடத்திச்செல்லப்பட்டு கடுமையாக தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞனை விசாரணைக்குட்படுத்த உள்ளதாக ஒரு குழுவினர் கடத்தி சென்றுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சித்திரவதை செய்யப்பட்டு கொலை
இவ்வாறு கடத்தப்பட்ட இளைஞன் கடுமையாக தாக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு, அன்றைய தினம் ஏழு மணியளவில் அவர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு முன்பாக விடப்பட்டுள்ளார்.
இதன்பின்னர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இளைஞன் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், சம்பவம் தொர்பில் தெமட்டகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுமிக்கு ஏற்பட்ட துயரம்... முதல் முறையாக கொடூரமான புதிய தண்டனைக்கு ஒப்புக்கொண்ட நாடு News Lankasri

உலகின் பணக்கார குடும்பம் இதுதான்; மொத்தம் 15,000 உறுப்பினர்கள் - செலவு எவ்வளவு தெரியுமா? News Lankasri
