வடகிழக்கு நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பலத்த காற்று, கனமழை மற்றும் கடல் கொந்தளிப்பு குறித்து வானிலை ஆய்வு நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று (23) பிற்பகல் 1 மணிக்கு வெளியிடப்பட்ட எச்சரிக்கை அறிவிப்பு அடுத்த 24 மணி நேரத்திற்கு செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வங்காள விரிகுடா மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் பயணிக்கும் மீன்பிடி படகுகளுக்கு இந்த எச்சரிக்கை பொருந்தும் என தெரிவித்துள்ளது.
கடல் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை
மேலும், கடல் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும், கடல் பகுதிகள் சில நேரங்களில் கொந்தளிப்பாக மாறக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காற்றின் வேகம் சில நேரங்களில் மணிக்கு 55 - 65 கி.மீ வரை அதிகரிக்கும் எனவும், அடுத்த 24 மணி நேரத்திற்குள் தென்கிழக்கு அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடகிழக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு நிலையம் கூறுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



