மோசமடையும் வானிலை தொடர்பில் விழிப்புடன் இருக்கவும்..! பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
புதிய இணைப்பு
நாட்டடின் பல பகுதிகளில் நிலவும் மோசமான வானிலை மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக மீன்வளம் மற்றும் நீர்வளத்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் தரவுகளின்படி, காங்கேசன்துறை, யாழ்ப்பாணம், மன்னார் முதல் கல்பிட்டிய வரையிலான கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 60-70 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என்றும், அதனால் கடல் அலைகள் மிக உயர்ந்த நிலைக்கு எழும் அபாயம் உள்ளது என்றும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
எனவே, காங்கேசன்துறை, யாழ்ப்பாணம், மன்னார், புத்தளம் முதல் கல்பிட்டிய வரையிலான கடற்பகுதிகளில் கடலோரப் பணிகளில் ஈடுபட்டுள்ள சிறுபடகுகள் மற்றும் பாரம்பரிய படகுகளின் உரிமையாளர்கள், மறு அறிவிப்பு வரும் வரை பணி நிமித்தமாக கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கல்பிட்டிய முதல் சிலாபம், நீர்கொழும்பு, கொழும்பு, காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலான கடற்பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரித்து, அலைகள் உயரும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாதுகாப்பாக பணியாற்றுவதற்கு ஏற்ற சூழல் இருந்தால் மட்டுமே கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறும், அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கடலில் பணிபுரியும் போதும், பாதுகாப்பாக கரைக்குத் திரும்பும் வரையிலும், முழு நேரமும் 'உயிர் காப்பு அங்கிகளை' அணிவது கட்டாயமாகும் என்றும் நினைவூட்டப்பட்டுள்ளது.
அவ்வப்போது வெளியிடப்படும் வானிலை எச்சரிக்கைகளைத் தொடர்ந்து கவனித்து, தங்கள் உயிரையும் உடைமைகளையும் பாதுகாத்துக்கொண்டு பொறுப்புடன் செயல்படுமாறு பொதுமக்களை மேலும் வலியுறுத்துகின்றன.
முதலாம் இணைப்பு
பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக காங்கேசன்துறை முதல் மன்னார் வழியாக கல்பிட்டிய வரையிலான கடலோரப் பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று (08) காலை 10.30 மணிக்கு விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை, நாளை (09) காலை 10.30 மணி வரை நடைமுறையில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மறு அறிவிப்பு வரும் வரை அவதானம்
இந்த எச்சரிக்கையின்படி, காங்கேசன்துறை முதல் மன்னார் வழியாக கல்பிட்டிய வரையிலான கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என்றும், அப்பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மறு அறிவிப்பு வரும் வரை அப்பகுதியில் பயணம் செய்ய வேண்டாம் என கடற்றொழிலாளர்கள் மற்றும் கடற்படைத்தரப்பினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருகோணமலை முதல் காங்கேசன்துறை வரையிலும், கல்பிட்டிய முதல் பொத்துவில் வரையிலும் கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக உள்ள கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என்றும், அப்பகுதிகள் கொந்தளிப்பாக இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிப்புகள் குறித்து விழிப்புடன் இருக்கவும்
மேலும், மன்னார் முதல் பொத்துவில் வரையிலும் கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக உள்ள கடற்பகுதிகளில் அலைகளின் உயரம் 2.0 முதல் 2.5 மீட்டர் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் எச்சரித்துள்ளது.
கடற்றொழில் மற்றும் கடற்படை சமூகத்தினர், வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிடும் எதிர்கால அறிவிப்புகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
இலங்கையில் ஒரு பவுண் தங்கத்துக்கு பெருந்தொகை வரி! நகை வாங்க காத்திருப்போருக்கு வெளியான அதிர்ச்சி தகவல்
விரைவில் அவிழும் ஈஸ்டர் தாக்குதலின் மர்மங்கள்! சுரே சாலே தரப்பின் பொய்களுக்கு எதிரான ஆதாரங்கள் நீதிமன்றில்
மோசமடையும் வானிலை தொடர்பில் விழிப்புடன் இருக்கவும்..! பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை