கனடாவின் போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எச்சரிக்கையுடன் இலங்கை
இலங்கை அடுத்த மாதம் போர் வெற்றியை கொண்டாடும் போது கனேடியத் தலைவர்கள் இனப்படுகொலைக் குற்றச்சாட்டுகளை முன்வைப்பார்களா என்பது தொடர்பில் எச்சரிக்கையுடன் இருப்பதாக இலங்கை (Sri Lanka) இராஜதந்திர தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
கடந்த ஆண்டு கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) போர் வெற்றி கொண்டாட்ட நிகழ்வுக் காலத்தில் இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.இது இரண்டு நாடுகளுக்கும் இடையே இராஜதந்திர மோதலைத் தூண்டியுள்ளது.
குற்றச்சாட்டு
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இலங்கை கனேடிய உயர்ஸ்தானிகரை அழைத்து தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
இந்தநிலையில், இதே குற்றச்சாட்டை கனேடிய பிரதமர் சுமத்துவாரா என்பதை இலங்கை அரசாங்கம் எச்சரிக்கையுடன் எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் போரின் போது நடந்த சம்பவங்கள் இனப்படுகொலைக்கு சமமானவை அல்ல என்று கனேடிய கூட்டாட்சி அரசாங்கம் முடிவு செய்திருந்தாலும், கனேடிய தலைவர்கள் இத்தகைய குற்றச்சாட்டுகளை தொடர்ந்தும் முன்வைத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri
