சுற்றுலா வந்த ரஷ்ய குடும்பத்திற்கு நேர்ந்த விபரீதம்! உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய பொலிஸாருக்கு பாராட்டு
காலி - ஹிக்கடுவை நாரிகம கடற்பகுதியில் ரஷ்ய பெண் ஒருவரின் ஒன்பது வயது ஆண் குழந்தை அலையினால் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் ஜகத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ரஷ்ய பெண் தனது ஏழு வயது மகனுடன் நரிகம கடலில் நீராடிக் கொண்டிருந்த வேளையில் குழந்தை அலையில் அடித்துச்செல்லப்பட்டமையினால் தாய் உதவிக்காக சத்தமிட்டுள்ளார்.
இதன்போது கடற்கரையில் கடமையாற்றிய இரு உயிர்காக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடலில் அடித்துச்செல்லப்பட்ட குழந்தையை காப்பாற்றியுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
தனது குழந்தையின் உயிரைக் காப்பாற்றியதற்காக இந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகளையும் ரஷ்ய பெண்,அருகில் இருந்தவர்கள் பாராட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 1 மணி நேரம் முன்

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
