2000 ரூபாவை நெருங்கிய இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் விலை
நாடு முழுவதும் உள்ள வர்த்தக நிலையங்களில் மரக்கறிகள் மற்றும் மீன்களின் விலைகள் வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.
தற்போது பெய்து வரும் கனமழையால் மரக்கறி முற்றாக அழிந்துள்ளதால், விலை மேலும் உயர்ந்துள்ளதாக பொருளாதார மையங்களின் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
மரக்கறிகளின் விலை
இதற்கமைய, ஒரு கிலோ கரட் 1000 ரூபாவாகவும், ஒரு கிலோ பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி 2000 ரூபாவை நெருங்குவதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும், போஞ்சி 500 ரூபாவாகவும், வெண்டைக்காய் 250 ரூபாவாகவும், மிளகாய் 700 ரூபாவாகவும், கோவா 500 ரூபாவாகவும்,போஞ்சி மற்றும் தக்காளி 800 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகின்றது.
இதேவேளை, தம்புள்ளை, தம்புத்தேகம, கப்பெட்டிபொல பொருளாதார மத்திய நிலையங்களில் ஒரு கிலோ கரட் ரூ.1,000, இஞ்சி ரூ.1,900, பச்சை மிளகாய் ரூ.1,800, கறி மிளகாய் ரூ.900, தக்காளி ரூ.900, கத்தரிக்காய் ரூ.800, வெண்டைக்காய் ரூ.560 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.
எனினும், சந்தையில் காய்கறிகளின் விலை உயர்வால் தமக்கு உரிய பலன் கிடைக்கவில்லை எனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

செங்கடல் மற்றும் இஸ்ரேல் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தும் ஹவுதிகள்... குவித்து வைத்திருக்கும் ஆயுதங்கள் News Lankasri

மரக்கிளைகளில் சிக்கிய சடலங்கள்... கரைகளில் அழுகும் மீன்கள்: டெக்சாஸ் பேரிடரின் கோர முகம் News Lankasri
