அரிசி வகைகளின் மருத்துவ பயன்கள் குறித்த அறிவியல் ஆய்வு
புற்றுநோய், நீரிழிவு மற்றும் பல நோய்களை உள்ளூர் அரிசி வகைகளைப் பயன்படுத்துவதன் மூலம் கட்டுப்படுத்த முடியும் என கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி சிறிமல் பிரேமகுமார தெரிவித்தார்.
25 வகையான உள்ளூர் அரிசி வகைகளை பயன்படுத்தி 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளின் அடிப்படையில், சுது ஹீனாட்டி, கொட ஹீனாட்டி, திக் வீ மற்றும் மசூரன் அரிசி வகைகளின் மருத்துவப் பயன்கள் குறித்த அறிவியல் ஆய்வுக் கட்டுரையும் வெளியிடப்பட்டுள்ளது.
எனினும் பாரம்பரிய அறிவை விஞ்ஞான ரீதியாக நிரூபித்த இந்த ஆய்வு முடிவுகளை ஒரு
நாடாக இலங்கை, சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வதாக தெரியவில்லை என கலாநிதி
பிரேமகுமார பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவித்துள்ளார்.





23 வயதில் ரூ. 250 கோடி சொத்துக்கு சொந்தக்காரியாக இருக்கும் பிரபல சீரியல் நடிகை!! யார் தெரியுமா? Cineulagam
