இலங்கையின் ஒன்பது மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
இலங்கையின் வானிலையில், தென்மேற்கு பகுதியில் நிலவும் மழை அடுத்த சில நாட்களுக்கு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய தினத்திற்கான காலநிலை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் வளிமண்டலவியல் திணைக்களம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
அத்துடன், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யும்.
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும்.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் பல இடங்களில் மழை பெய்யும்.
ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் எதிர்வு கூறியுள்ளது.
இதேவேளை இலங்கையின் ஒன்பது மாவட்டங்களுக்கு பலத்த மழைவீழ்ச்சி குறித்து சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவு, வடக்கு, வட - மத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri
சிறகடிக்க ஆசை சீரியலில் டம்மி ஆகிவிட்டதா மீனா ரோல்.. கடும் கோபத்தில் ரசிகர்கள்.. புரோமோ வீடியோ Cineulagam
ரஜினி படத்தில் இருந்து வெளியேறிய சுந்தர் சி.. திடீரென குஷ்பூ - கமல்ஹாசன் நேரில் சந்திப்பு! Cineulagam
500 உயிர்களைக் காத்த இந்திய கடற்படையின் துரித நடவடிக்கை... ஐ.நா.வுக்கான தூதர் வெளிப்படை News Lankasri