தேசிய எதிா்ப்பு நாளில் ஆசிரியா்கள் நாடளாவிய ரீதியில் போராட்டம்
தேசிய எதிர்ப்புத் தினமாகிய இன்று நாடு முழுவதும் அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டினை தீர்க்கக் கோரி வலய மட்டத்தில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இரத்தினபுரி நகரில், முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கடந்த 24 ஆண்டுகளாக தீர்க்கப்படாத அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தீர்க்கப்படும் வரையில் இந்தப் போராட்டம் ஓயாதெனவும், அரசாங்கத்தின் அச்சுறுத்தலுக்கு அடிபணியாது போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உபதலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் குறிப்பிட்டார் .
மேலும் மாவனல்ல பிரதேசத்தில் பிரதேச சபை உறுப்பினர் அத்துமீறி பாடசாலைக்குள் நுழைந்து அச்சுறுத்திய செயலை வன்மையாக கண்டிப்பதாகவும், இவ்வாறான முறையற்ற செயற்பாடுகள் இனிமேலும் நடக்க இடமளிக்கக் கூடாது என்றும் அவா் குறிப்பிட்டார்.
இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான அதிபர் ஆசிரியர்கள் கலந்து கொண்டனா்.
முல்லைத்தீவு
ஆசிரியர்கள் சம்பள முரண்பாட்டினை நீக்க கோரி முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு வலய கல்வி அலுவலகத்திற்கு முன்பாக அதிபர் ஆசிரியர்களின் பெற்றோர்கள் ஒன்றிணைந்து கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்றினை முன்னெடுத்துள்ளார்கள்.
முல்லை வலயத்தினை சேர்ந்த அதிபர் சங்கம், ஆசிரியர்சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம் ஆகியன ஒன்றிணைந்து இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளார்கள்.
24 ஆண்டுகளாக கோரி நிக்கும் சுபோதினி ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைய சம்பள உயர்வு வழங்கப்படவேண்டும் என்ற நிலையில் இந்த அரசிற்கு ஒரு செய்தியினை சொல்லி நிற்கின்றோம். நாடு வங்குறோத்து நிலையினை அடைந்துள்ள நிலையில் நாங்கள் சம்பளத்தினை அதிகரிக்கசொல்லி கோரவில்லை 20 ஆண்டுகளுக்கு மேலாக பரித்துரைத்த சம்பளத்தினையே கோரி நிக்கின்றோம்.
ஒரு சில தொழிற்சங்கங்கள் எங்களை கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கின்றன. எல்லா தொழிற்சங்கங்களும் சம்பளத்தினை அதிகரிக்க சொல்லித்தான் கோருகின்றது.
20 ஆண்டுகளாக அதிகரித்த சம்பளத்தினை வழங்காது இருக்கின்றது. எனவே சம்மந்தப்பட்ட அனைவரும் கருத்தில் எடுத்து உடனடியாக நிலுவையாக இருக்கின்ற சம்பளத்தினை வழங்கவேண்டும் என்றும் கோரி இந்த கவனயீர்ப்பினை மேற்கொண்டுள்ளார்கள்.
மட்டக்களப்பு
பல்வேறு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து செவ்வாய்க்கிழமை பிற்பகல் மட்டக்களப்பு மாவட்டம் (9)வாழைச்சேனை சந்தியில் பதாதைகளை ஏந்தியவாறு அதிபர் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கை ஆசிரியர் சங்கமானது அதிபர் ஆசிரியர் கூட்டணியுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கல்குடா வலயக்கல்வி அலுவலக அதிபர்கள் ஆசிரியர்கள் நூற்றுக்கும் அதிகமானோர் கலந்துகொண்டதுடன் அச்சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் பொன்னுத்துரை உதய ரூபன் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.
வாழைச்சேணை சந்தியில் சுலோகங்கள் எழுதப்பட்ட பதாகைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் பின்னர் பேரணியாக கல்குடா வலயக்கல்வி அலுவலகம் வரை சென்று அங்கும் கோஷங்களை எழுப்பினர் அதிபர் ஆசிரியர்களின் 24 வருட சம்பள முரண்பாட்டை நீக்கு , அதிபர் ஆசிரியர்களின் சேவையை அகப்படுத்தப்பட்ட சேவையாக அங்கீகரி , சுபோதினி திட்டத்தை செயல்படுத்து, தரமான கல்விக்கு வளங்களை வழங்கு, மொத்த தேசிய வருமானத்தில் கல்விக்கு 6 வீதத்தை ஒதுக்கு, அதிபர் ஆசிரியர் பெற்றோர்களுக்கு அழுத்தம் கொடுப்பதை நிறுத்து, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகசட்டமூலத்தை அமுல் படுத்தாதே, ஆசிரியர்களின் சம்பளம் முரண்பாட்டுக்கான உயர் நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்து,
இலவசக் கல்வியை தனியார் மயப்படுத்தாதே, அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை நீக்கி அதிபர் ஆசிரியர் சேவையை கௌரவப்படுத்து, அரசே தரமான கல்விக்கு உடனடித் தீர்வு வழங்கு போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு இதன்போது அதிபர் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.





பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

இந்த ராசியினர் மருமகளை மகளாகவே நடத்தும் தலைசிறந்த மாமியாராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan
